1125 தாண்டிய சிக்ஸர் மழை.. 2024 ஐபிஎல் தொடர் பிரம்மாண்ட சாதனை.. வெளியேறிய பஞ்சாப்பிடம் திணறிய ராஜஸ்தான்

Most Sixes
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கெளஹாத்தி நகரில் 65வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய பஞ்சாப்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் துவக்கிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 18 (15) ரன்களில் அவுட்டாகி சென்றார். அதே போல மறுபுறம் அறிமுகப் போட்டியில் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் டாம் கோலர்-கேட்மோர் 18 (23) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

சிக்ஸர் மழை:
அதனால் 42/3 என தடுமாறிய ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த துருவ் ஜுரேல் 0, ரோவ்மன் போவல் 4, டெனோவன் பெரிரா 7 ரன்களில் அவுட்டாகி மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தினர்.

இறுதியில் ரியான் பராக் முடிந்தளவுக்கு போராடி 5 பவுண்டரியுடன் 48 (34) ரன்களில் அவுட்டானார். அவருடன் ட்ரெண்ட் போல்ட் 12 (9) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ராஜஸ்தான் போராடி 144/9 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த போட்டியில் சென்னையிடம் தோற்ற ராஜஸ்தான் தற்போது பஞ்சாப் அணியிடமும் குறைந்த ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக அந்த அந்த அணி இப்படி விளையாடுவது ராஜஸ்தான் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் இப்போட்டியில் 145 ரன்களை சேசிங் செய்து ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியை விட்டு விலகி இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா பிளமிங்? – காசி விஸ்வநாதன் கொடுத்த விளக்கம்

அதை விட இப்போட்டியில் ராஜஸ்தான் அணி அடித்த 2 சிக்ஸரையும் சேர்த்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 1127* சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 17 வருட வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட தொடராக ஐபிஎல் 2024 சீசன் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023 சீசனில் 1124 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

Advertisement