சி.எஸ்.கே அணியை விட்டு விலகி இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா பிளமிங்? – காசி விஸ்வநாதன் கொடுத்த விளக்கம்

Kasi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அந்த தொடருக்கு பின்னர் தான் பயிற்சியாளர் பதவியில் தொடர் விரும்பவில்லை என்பதனால் ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை வழங்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தீவிரப்படுத்தி உள்ளது. இவ்வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் அடுத்த பயிற்சியாளராக இருப்பார் என்று கடந்த சில நாட்களாக சில தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

மேலும் ஸ்டீபன் பிளமிங்கை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ அழைத்து பேசியதாக சில தகவல்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் : இதுபோன்ற எந்த ஒரு தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை. பிளெமிங்கிடம் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. அதேபோல சிஎஸ்கே அணியின் நிர்வாகமும் இதுகுறித்து பிளம்மிங் இடம் எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் ஸ்டீபன் பிளெமிங் சிஎஸ்கே அணியை விட்டு செல்ல மாட்டார் என்று தெரிகிறது. அதன் காரணமாக நிச்சயம் வேறொரு புது பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டதாக சொல்லப்படும் வேளையில் நிச்சயம் வெளிநாட்டு பயிற்சியாளரையே இந்திய அணி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : ப்ரித்வி ஷாவிற்கு அதிகளவு வாய்ப்பு வழங்கப்படாததுக்கு காரணம் இதுதான் – டெல்லி அணியின் துணை கோச் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்ற ஸ்டீபன் பிளெமிங்கின் அனுபவத்தை கொண்டு வந்து இந்திய அணியை பலப்படுத்தவே பிசிசிஐ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட வேளையில் அந்த தகவல் அவ்வளவு உண்மை இல்லை என்பது உறுதியுள்ளது.

Advertisement