ப்ரித்வி ஷாவிற்கு அதிகளவு வாய்ப்பு வழங்கப்படாததுக்கு காரணம் இதுதான் – டெல்லி அணியின் துணை கோச் பேட்டி

Prithvi
- Advertisement -

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது சில போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த வாய்ப்பை இழந்தது.

இந்த தொடரின் முதல் பாதியில் மோசமாக செயல்பட்ட டெல்லி அணியானது இரண்டாம் பாதியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசியில் 7 வெற்றிகளை பெற்றிருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் போது டெல்லி அணியின் நட்சத்திர துவக்க வீரரான பிரித்வி ஷாவிற்கு பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் 8 போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் 198 ரன்களை மட்டுமே அடித்தாலும் கன்சிஸ்டண்சி பிரச்சனை இருப்பதினால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிலும் குறிப்பாக மே மாதத்தில் ஒரு போட்டியில் கூட அவர் களமிறக்கப்படாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள டெல்லி அணியின் துணை பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே கூறுகையில் :

- Advertisement -

டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் பிரித்வி ஷாவும் ஒருவர். கடைசியாக நாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் அவர் பாமில் இல்லை என்பது மட்டும்தான். ஏனெனில் பார்மில் இல்லை என்றால் எந்த ஒரு வீரருக்கும் அணியில் இடம் கிடைக்காது.

இதையும் படிங்க : பாகிஸ்தானை டேமேஜ் செய்யும் விராட் கோலியின் பலமே வேற.. 2024இல் அதை செய்யனும்.. எச்சரித்த மிஸ்பா

டெல்லி அணி ஒட்டுமொத்தமாகவே இந்த தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி உள்ளது. சில வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒரு சில வீரர்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடினர். அந்த வகையில் பிரித்விஷாவும் ஒருவர் என பிரவீன் ஆம்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement