என்னது வேண்டுமென்றே சுரேஷ் ரெய்னாவை ஒதுக்கியதா சி.எஸ்.கே – மெகா ஏலத்தில் இதை கவனிச்சீங்களா?

Raina-1
Advertisement

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் எப்போதுமே முக்கிய அணியாக வலம்வரும் சிஎஸ்கே அணி ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். ஏனெனில் இதுவரை அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் திகழும் சிஎஸ்கே அணியானது தோனியின் தலைமையில் பிரமாதமான செயல்பாட்டை ஐபிஎல் வரலாற்றில் வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத அணியாக இருந்து வருகிறது.

CSK-2

இப்படி சிஎஸ்கே அணி வீரநடை போட அணியின் துணை கேப்டனும், அனுபவ வீரருமான சுரேஷ் ரெய்னாவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா அணியில் முக்கிய நபராக இருந்து சிஎஸ்கே அணிக்கு எத்தனையோ போட்டிகளில் வெற்றியை உறுதி செய்து தந்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றும் போதெல்லாம் இவரது ஆட்டம் பிரமாதமாக இருக்கும். இப்படி சிஎஸ்கே அணியின் தூணாக இருந்த வீரரை நேற்று ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5528 ரன்களை குவித்துள்ளார்.

raina 1

இப்படி இவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும் அவரை நேற்று சிஎஸ்கே அணி கண்டுகொள்ளவே இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம். அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு அவர் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை என்றாலும் நிச்சயம் 2-வது சுற்றில் அவரை சற்று குறைவான தொகைக்கு சிஎஸ்கே அணி அவரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது சுற்று ஏலத்தின் போது அவரின் பெயர் லிஸ்டிலேயே இல்லை.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் சிஎஸ்கே அணி மட்டுமின்றி மற்ற அணிகளும் அவரை வேண்டாம் என்று புறக்கணித்ததால் அவரது பெயர் அந்த லிஸ்டிலேயே பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் முதல் சுற்றில் விற்கப்படாமல் போன வீரர்கள் இரண்டாவது சுற்று ஏலத்திற்கு வரும் போது ஒரு சில அணிகள் ஆர்வம் காட்டினால் மட்டுமே அவரது அவர்களது பெயர் அந்த பட்டியலில் இடம்பெறும்.

இதையும் படிங்க : வெறும் 20 லட்சத்திற்கு அடுத்த ருதுராஜ் கெய்க்வாட்டை வாங்கிய சி.எஸ்.கே – யார் அந்த வீரர் தெரியுமா?

ஆனால் சுரேஷ் ரெய்னாவின் பெயரை சிஎஸ்கே அணியே இரண்டாவது சுற்றில் ஆர்வம் காட்டாததால் அவரது பெயர் 2-வது சுற்றில் இடம்பெறாமல் போனது. அதனால் தற்போது அவர் விற்கப்படாமல் போயுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் சுரேஷ் ரெய்னா இல்லாமல் ஒரு தொடரா என்று ரசிகர்கள் தங்களது வருத்தங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement