ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 49வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனால் ஏற்கனவே 7 முறை தோல்வியை சந்தித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இம்முறையும் டாஸ் வெற்றி பெறாததால் ஏமாற்றத்தை சந்தித்தார். ஆனால் தம்முடைய வீரர்கள் முதலில் பேட்டிங் செய்வதற்கு விரும்பியதாக தெரிவித்த அவர் டாஸ் வெற்றி பெறாததால் அந்த வாய்ப்பை பெற முடியவில்லை என்று ஏமாற்றத்துடன் பேசினார். அத்துடன் இந்த போட்டியில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை.
ஏமாற்றும் டாஸ்:
மேலும் முதன்மை பவுலரான பதிரனா லேசான காயத்தை சந்தித்துள்ளதாக தெரிகிறது. எனவே அந்த இருவரும் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று ருதுராஜ் அறிவித்தார். அவர்களுக்கு பதிலாக காயமடைந்த டேவோன் கான்வேவுக்கு பதிலாக வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் கிலீசன் இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாவதாக ருதுராஜ் அறிவித்தார். அதே போல மற்றொரு இடத்தை சர்துல் தாக்கூர் நிரப்புவார் என்று அவர் கூறினார்.
இது பற்றி டாஸ் வீசியதும் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் ஃபீல்டிங் செய்ய விரும்பினோம். டாஸ் வெல்வதில் என்னுடைய வெற்றி சராசரியை பார்க்க விரும்புகிறேன். எங்களுடைய அணியில் பெரும்பாலான வீரர்கள் முதலில் பேட்டிங் செய்ய தயாராக உள்ளனர். ஆனால் அதில் நாங்கள் இங்கே தோல்வியை சந்தித்தோம். எங்களுக்கு என்ன செய்வது என்று உண்மையாக தெரியவில்லை”
“சேப்பாக்கத்தில் அதிகப்படியான பனி இருப்பதால் இலக்கை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. இருப்பினும் ஹைதராபாத் அணிக்கு எதிராக 78 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் வென்றது எங்களுடைய அணியின் தரத்தை பற்றி பேசுகிறது. இந்த போட்டியில் துசார் தேஷ்பாண்டே மற்றும் பதிரனா ஆகியோர் விளையாடவில்லை. எனவே நாங்கள் ஆரம்பத்திலேயே நல்ல ஸ்கோர் அடிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியம்”
இதையும் படிங்க: மொதல்ல டாஸ் போடா கத்துக்கோ.. தோனி கொடுத்த அட்வைஸ்.. பிரத்யேக பிராக்டீஸ் எடுக்கும் ருத்து – அவரே கூறிய தகவல்
“பதிரனா லேசான காயத்தை சந்தித்துள்ளார். தேஷ்பாண்டே நன்றாக இல்லை. எனவே சர்துல் தாக்கூருடன் ரிச்சர்ட் கிலீசன் அறிமுகமாக களமிறங்க உள்ளனர்” என்று கூறினார். சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, டேரில் மிட்சேல், மொய்ன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கீப்பர்), சர்துல் தாகூர், தீபக் சஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் கிலீசன்



