வெறும் 20 லட்சத்திற்கு அடுத்த ருதுராஜ் கெய்க்வாட்டை வாங்கிய சி.எஸ்.கே – யார் அந்த வீரர் தெரியுமா?

Ruturaj-3
Advertisement

இந்த ஆண்டு இந்தியாவில் வருகிற மார்ச் மாதம் இறுதியில் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் பத்து அணிகளுடன் இந்த 15வது சீசன் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக வீரர்களின் மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது.

CSK-Auction

இந்த ஏலத்தில் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை அணியானது எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே விளையாட உள்ள நிலையில் அடுத்ததாக சிஎஸ்கே அணியை பலப்படுத்தும் முயற்சியில் இருப்பதனால் அணியை எந்தெந்த வீரர்களுடன் கட்டமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் சிஎஸ்கே அணி பல வீரர்களை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில வீரர்கள் தற்போது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணி தேர்வு செய்த ஒரு வீரர் தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அந்த வீரர் யாரெனில் ஒடிசா கிரிக்கெட் அணியை சேர்ந்த 25 வயது வலதுகை ஆட்டக்காரர் சுப்ரன்ஷு சேனாபதி என்பவர்தான்.

senapati 2

ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே சிஎஸ்கே இவர் மீது ஒரு கண் வைத்துள்ளதாகவும் இவரிடம் நிச்சயம் பெரிய அளவில் சிறப்பாக செயல்படும் திறமை இருப்பதாக கூறி இருந்தார்கள். அந்த வகையில் நேற்று ஏலத்தின் போது அவரை அடிப்படையான 20 லட்ச ரூபாய்க்கு எடுத்து சிஎஸ்கே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் இவருடைய பேட்டிங் ஸ்டைல் அப்படியே கிட்டத்தட்ட ருதுராஜ் கெய்க்வாட்டை போன்றே இருக்கும் என்பதனால் சிஎஸ்கே அணிக்கு அடுத்த ருதுராஜ் கெய்க்வாட் கிடைத்துவிட்டார் என்று கூறலாம்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஒடிசா அணிக்காக ரன்களை குவித்து அசத்தினார். அதோடு வலது கை மித வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இவர் சிஎஸ்கே அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. எப்போதும் இது போன்று சிறிய வீரர்களை ஏலத்தில் எடுத்து ஒரு பெரிய பிளேயராக மாற்றும் தன்மையுடைய சிஎஸ்கே எவருக்கும் வாய்ப்பு அளித்து நிச்சயம் ஒரு பெரிய வீரராக உருவாக்கும் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : டூபிளெஸ்ஸிஸ்க்கு பதிலாக சரியான மாற்று வீரரை தேர்வு செய்த சி.எஸ்.கே – யார் அந்த வீரர் தெரியுமா?

இந்நிலையில் தான் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டதை அறிந்த சேனாபதி தனது நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடியது மட்டுமின்றி தான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவருடைய கேப்டன்சியின் கீழ் விளையாட உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement