டூபிளெஸ்ஸிஸ்க்கு பதிலாக சரியான மாற்று வீரரை தேர்வு செய்த சி.எஸ்.கே – யார் அந்த வீரர் தெரியுமா?

CSK-1
- Advertisement -

ஐபிஎல் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த இரு தினங்களாக பெங்களூருவில் நடைபெற்ற வீரர்களின் மெகா ஏலமானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியானது நான்கு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளதாலும் இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்பதாலும் சென்னை அணி தேர்வு செய்யும் வீரர்களின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

CSK-2

- Advertisement -

இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா 16 கோடி, எம்எஸ் தோனி 12 கோடி, மொய்ன் அலி 8 கோடி, ருதுராஜ் கைக்வாட் 6 கோடி ஆகிய 4 வீரர்களை மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்தது. மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் ஏலத்தொகையில் இந்த 4 வீரர்களுக்கு செலவிட்ட தொகை போக மீதி 48 கோடிகளுடன் சென்னை அணி நிர்வாகம் இந்த ஏலத்தில் களமிறங்கியது.

அப்படி இந்த ஏலத்தில் சென்னை அணி ஏற்கனவே நமது அணியில் விளையாடிய சில வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் அணியில் வாங்கியது. அதுமட்டுமின்றி பல புதிய வீரர்களை தேர்வு செய்தது. அந்த வகையில் சென்னை அணியில் இருந்து துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய ஏலத்தின் இறுதிகட்டத்தில் ஆர்வம் காட்டிய சென்னை அணி அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்தை சேர்ந்த டேவான் கான்வேவை தேர்வு செய்துள்ளது.

conway 1

30 வயதான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 602 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் என மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இவரின் அனுபவம் குறைவு என்றாலும் ரன்களை தொடர்ச்சியாக குவிக்கும் திறன் உடையவர். அதுமட்டுமின்றி கோலியைப் போன்றே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் இவர் நிச்சயம் தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும்.

- Advertisement -

இதன் காரணமாகவே அவரை சிஎஸ்கே அணி நம்பி ஏலத்தில் எடுத்துள்ளது. நிச்சயம் இவரே சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வலதுகை துவக்க வீரராக ருதுராஜ் இருப்பதனால் இடதுகை துவக்க வீரராக டேவான் கான்வே களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி எப்போதுமே அணியில் தொடர்ச்சியாக ரன் குவிக்கும் துவக்க வீரர் இருக்கும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும். அந்த வகையில் கான்வே தொடர்ந்து ரன் குவிக்கும் தன்மை உடையவர் என்பதனால் நிச்சயம் அவரே இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய டூப்ளஸ்ஸிஸ் ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு – என்ன சொல்லியிருக்காரு?

அதோடு இவரது இந்த தேர்வு நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் பல கோடி கொடுத்து எடுக்கப்படும் வீரர்கள் தங்கள் மீது உள்ள அழுத்தம் காரணமாக சோபிக்க தவறி வருவதை நாம் பலமுறை கண்டுள்ளோம். ஆனால் தற்போது சிஎஸ்கே அணியால் இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து வாங்கப்பட்ட இவர் தனது இயல்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்துவார் என்றும் நிச்சயம் அவரது ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக உதவும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement