சாம்சன் ஐடியா கொடுத்தாரு.. இந்த சல்யூட் என்னோட இந்திய ராணுவ அப்பாவுக்காக.. துருவ் ஜுரேல் நெகிழ்ச்சி

Dhruv Jurel
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 44வது லீக் போட்டியில் லக்னோவை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 196/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 76, தீபக் ஹூடா 50 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 1 விக்கெட் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 197 ரன்கள் துரத்திய ராஜஸ்தானுக்கு துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 24, ஜோஸ் பட்லர் 34 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான அரை சதமடித்து 71* (33) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதே போல இளம் வீரர் துருப் ஜுரேல் தன்னுடைய முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்து 52 (34) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தந்தைக்கு சல்யூட்:
அதனால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த ராஜஸ்தான் தங்களுடைய 9 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் பிடித்துள்ள அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் 90% உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய துருவ் ஜுரேல் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

அதில் அரை சதமடித்த போது ராணுவத்தில் பணியாற்றிய தம்முடைய தந்தைக்காக அவர் சல்யூட் அடித்து மரியாதை கொடுத்தார். அதே போல இப்போட்டியிலும் 50 ரன்கள் கடந்த போது அவர் சல்யூட் அடித்து தந்தைக்கு மரியாதை செய்தார். இந்நிலையில் தம்முடைய தந்தைக்காகவே கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவிக்கும் ஜுரேல் முக்கிய நேரத்தில் அவசரப்படாமல் விளையாடுமாறு கேப்டன் சஞ்சு சாம்சன் ஐடியா கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை ஃபினிஷிங் செய்ய விரும்புகிறேன். அதனால் கடைசி வரை நின்று என்னுடைய அணிக்காக போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன். பவர் பிளேவில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே வெளியே இருப்பார்கள். மிடில் ஓவர்களில் 5 பேர் வெளியே இருப்பார்கள். எனவே அதற்கு தகுந்தார் போல் பயிற்சிகளை செய்கிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக அசத்தியவர்.. கஷ்டமான வேலையை செய்யும் ஜுரேலை நம்புறோம்.. சஞ்சு சாம்சன் பேட்டி

“பேட்டிங்கில் நன்றாக துவங்கியும் நான் அடித்த ஷாட்டுகள் கைகளுக்கு சென்றது. அப்போது கடினமாக அடிக்காமல் அமைதியாக பொறுமையுடன் விளையாடுமாறு சஞ்சு சாம்சன் என்னிடம் சொன்னார். அதனால் நேரம் எடுத்து விளையாடிய நான் ஒரே ஓவரில் 20 ரன்கள் அடித்து பின்னர் அப்படியே விளையாடினேன். நான் எப்போதும் என்னுடைய தந்தைக்காக விளையாடுகிறேன். டெஸ்ட் போட்டிகளின் போது அவருக்காக சல்யூட் செய்தேன். அவர் இந்திய ராணுவத்தில் வேலை செய்தவர். இன்றைய சல்யூட் மைதானத்தில் இருந்த அவருக்கானது” என்று கூறினார்.

Advertisement