மும்பையின் ஹெல்ப் தேவை.. கொதித்தெழுந்து வரும் ஆர்சிபி.. பிளே ஆஃப் செல்வதற்கு செய்ய வேண்டியது இதோ

RCb Team 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 58வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. தரம்சாலா நகரில் மே 9ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 241/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 92, கேமரூன் கிரீன் 46, ரஜத் படிடார் 55 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3, கவேரப்பா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 242 ரன்களை துரத்திய பஞ்சாப் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரிலீ ரோசவ் 61, சசாங் சிங் 37 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பிளே ஆஃப் வாய்ப்பு:
அதனால் மும்பையை தொடர்ந்து இரண்டாவது அணியாக பஞ்சாப் அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. மறுபுறம் 12 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. சொல்லப்போனால் ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பெங்களூரு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்ததால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த அந்த அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று தற்போது 7வது இடத்திற்கு போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முதலில் தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியமாகும். குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான இந்தப் போட்டியை போல தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் கொஞ்சம் பெரிய வெற்றிகளை பெற்று ரன் ரேட்டை அதிகமாக வைத்துக் கொள்வது பெங்களூருவின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கான முதல் படியாகும்.

- Advertisement -

அத்துடன் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடிக்க வேண்டும். அது போக ஏற்கனவே முதல் அணியாக வெளியேறிய மும்பை மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் லக்னோவை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் அணியை கொல்கத்தா அல்லது ஹைதராபாத் அணி தோற்கடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அவங்கள திரும்ப திரும்ப ஏமாத்த முடியாது.. இனிமேல் ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்க.. விராட் கோலி பேட்டி

மேற்கூறிய 3 அம்சங்களும் நடைபெற்றால் தற்போது 4வது இடத்தில் உள்ள சென்னை தாமாக கீழே வந்து விடும். மறுபுறம் 14 புள்ளிகளுடன் நல்ல ரன் ரேட்டை கொண்டிருக்கும் பட்சத்தில் பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆனால் தற்போது அதற்கு குறைந்த வாய்ப்புகளே இருப்பதால் அதிர்ஷ்டத்துடன் பெங்களூரு பிளே ஆஃப் செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement