மேட்ச்க்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டு தான் வந்தோம்.. இம்பேக்ட் பிளேயாரா வந்து மும்பையை காலி செய்த – ராஷிக் பேட்டி

Rasikh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணியானது 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றிபெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஜேக் பிரேசர் மெக்கர்க் (84), ஸ்டப்ஸ் (48), பண்ட் (41) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கு எதிராக 20 ஓவர்களின் முடிவில் எவ்வளவோ போராடியும் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் வரை வந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ராஷிக் டார் சலாம் 4 ஓவர்கள் பந்துவீசி 34 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக பாண்டியா, நேஹல் வதேரா, முகமது நபி ஆகியோரது விக்கெட்டை அவர் வீழ்த்தியிருந்தார். பின்னர் போட்டி முடிந்து பேசிய அவர் கூறியதாவது :

- Advertisement -

இந்த மைதானத்தில் பந்துவீசுவது என்பது மிக கடினமான ஒன்று.. இருப்பினும் எங்களது அணியின் பயிற்சியாளர்கள் அதற்காக தனி திட்டத்துடன் எங்களுக்கு பயிற்சி வழங்கியிருந்தனர். எனது அணிக்கு என்ன தேவை அதை செய்துகொடுக்க நான் விரும்புகிறேன். அதன்படி இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : அந்த பையன் எங்களை வச்சி விளையாடிட்டான்.. தோல்விக்கு பிறகு டெல்லி வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

இந்த போட்டிக்கு முன்னதாகவே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பண்ட் ஸ்டம்ப் அருகில் வந்து நிற்கப்போவதை பற்றி கூறியிருந்தார். அந்தவகையில் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப அவரது நகர்வு விக்கெட்டுகளை பெற்றுத்தந்தது என ராஷிக் டார் சலாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement