கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா கே.எல் ராகுல்.. லக்னோ அணியின் நிர்வாகம் அளித்துள்ள பதில்

LSG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது.

ஆனால் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 167 ரன்களை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி பெற்ற இந்த மாபெரும் வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பும் நொறுங்கி போனது. இதன் காரணமாக வருத்தம் அடைந்த லக்னோ அணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்கா போட்டி முடிந்த பின்னர் மைதானத்திலேயே கே.எல் ராகுலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்துமே சமூக வலைதளத்தில் வைரலாக பலரும் லக்னோ அணியின் உரிமையாளர் அந்த செயல் குறித்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதோடு லக்னோ அணியின் உரிமையாளர் நடந்து கொண்டதில் கே.எல் ராகுலுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக கடைசி இரண்டு லீக் போட்டிகளில் அவர் கேப்டன் பதவியில் விலகி கடைசி இரண்டு போட்டியிலும் விளையாட மாட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவியது.

- Advertisement -

அதோடு லக்னோ அணியில் இருந்து விலகிய அவர் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து லக்னோ அணியின் செய்தி தொடர்பாளர் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : இப்போவும் சொல்றேன்.. அதான் விராட் கோலிக்கு கரெக்ட்.. பிரச்சனை இம்பேக்ட் விதிமுறையில் இல்ல.. கங்குலி பேட்டி

லக்னோ அணி அடுத்ததாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 14-ஆம் தேதி மோதுகிறது. அந்த போட்டியிலும் கே.எல் ராகுல் தான் கேப்டனாக இருப்பார். அதோடு மும்பை அணிக்கு எதிராக 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் கடைசி போட்டியிலும் அவரே கேப்டனாக இருப்பார் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement