அபிஷேக் சர்மா அந்த கதவை அடிச்சு நொறுக்கிட்டாரு.. வேற யாருமே இப்படி அடிக்கல.. ஹர்பஜன் பாராட்டு

Harbhajan Singh 15
- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளில் ஹைதராபாத் மட்டும் எதிரணிகளை அடித்து நொறுக்கும் ஆபத்தான அணியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வருடம் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்த அந்த அணி டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.

அத்துடன் லக்னோவுக்கு எதிராக 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்த ஹைதெராபாத் வரலாற்றுச் சாதனை படைத்தது. அந்த அணியின் இந்த அதிரடி நடைக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய துவக்க வீரர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். குறிப்பாக இளம் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 13 போட்டிகளில் 467 ரன்களை 209.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிங் வெளுத்து வாங்கி வருகிறார்.

- Advertisement -

நொறுக்கும் அபிஷேக்:
மேலும் இதுவரை 41 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் நடப்பு சீசனில் அபிஷேக் ஷர்மா போல் மற்ற இளம் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடவில்லை என்று ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். அந்த வகையில் அதிரடியாக விளையாடும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் தேர்வுக்குழு கதவையும் கிட்டத்தட்ட உடைத்துள்ளதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் இந்திய அணிக்காக அவர் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஹர்பஜன் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார். இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை”

- Advertisement -

“அந்தளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் இன்னும் பந்து வீசவில்லை. அவர் நல்ல ஆல் ரவுண்டர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் சதத்தை தவற விட்டதற்காக மகிழ்ச்சியுடன் இல்லை. ஆனால் அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸை விளையாடினார். ரஞ்சிக் கோப்பையில் என்னுடைய தலைமையில் தான் அவர் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்”

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித் மாதிரி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இல்லாதது ஏன்? தல தோனி விளக்கம்

“அந்த வகையில் இந்தளவுக்கு வளர்ந்து அவர் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவை சுற்றியுள்ளார். ஒருநாள் அவர் இந்திய அணிக்குள் நுழைந்து விடுவார்” என்று கூறினார். அதே போல அபிஷேக் சர்மா விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங்கும் சமீபத்தில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement