ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறி சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றதும் தோனி செய்த முதல் செயல் – இவர் இன்னும் மாறல

Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசியாக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்நிலையில் தற்போது 42 வயதான தோனிக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்பட்டதால் நிச்சயம் தோனியை வெற்றியுடன் வழி அனுப்ப வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் சென்னை அணி ஐந்தாவது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.

அதோடு தற்போது 42 வயதாகும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாத வேளையில் நிச்சயம் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்றும் அதனால் அடுத்த சீசனில் சில போட்டிகளில் விளையாடிவிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் ஓய்வை அறிவிப்பார் என்ற ஒரு பேச்சும் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் பல்வேறு சலசலப்புகள் அவர் மீது இருந்து வரும் வேளையில் தற்போது அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பி விட்டார். அப்படி ராஞ்சிக்கு திரும்பியதும் அவர் முதல் வேலையாக தனக்கு பிடித்த யமஹா பைக் ஒன்றினை எடுத்து ராஞ்சி நகர வீதிகளில் உலா வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தோனியை பற்றி தவறாக விமர்சிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்.. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? – விவரம் இதோ

எப்பொழுதுமே பைக் ஓட்டுவதில் பிரியமாக இருக்கும் தோனி அவரது பண்ணை வீட்டில் ஏகப்பட்ட பைக்குகளை வைத்து அதனை பராமரித்து அதனை ஓட்டுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் வீட்டிற்கு திரும்பிய தோனி தற்போது முதல் வேலையாக பைக் ரைடு சென்றுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

Advertisement