அந்த பையன் எங்களை வச்சி விளையாடிட்டான்.. தோல்விக்கு பிறகு டெல்லி வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

டெல்லி நகரில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களது (டெல்லி) சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக ஜேக் பிரேசர் மெக்கர்க் 84 ரன்களையும், ஸ்டப்ஸ் 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி வந்தாலும் இடையிடையே விக்கெட்டுகளை இழந்தது. அதன் காரணமாக இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

அதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டி முற்றிலுமாக கடைசி வரை நெருக்கமாக சென்றது. இருப்பினும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

- Advertisement -

ஏனெனில் இதுபோன்ற போட்டிகளில் இரு அணிகளுக்கும் சரிசமமான அழுத்தம் இருக்கும். இருந்தாலும் நாங்கள் இறுதிவரை போராட முடியும் என்று நினைத்தோம். மிடில் ஓவர்களில் இன்னும் நாங்கள் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும். அந்த இடத்தில் ரன் குவிப்பை கோட்டை விட்டோம்.

இதையும் படிங்க : அவர் டீம்க்கு வந்த பர்ஸ்ட் நாள்ல இருந்து பிரமாதமா ஆடிட்டு வராரு.. வெற்றிக்கு பிறகு பாராட்டிய – ரிஷப் பண்ட்

டெல்லி அணி சார்பாக விளையாடிய ஜேக் பிரேசர் மெக்கர்க் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேவையான பந்துகளில் எல்லாம் மிகச்சரியாக ரிஸ்க் எடுத்து பவுண்டரிகளை விளாசினார். அவர் ஆடிய ஆட்டம் பயமற்ற ஆட்டம் என்று தெரிந்தது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement