எப்படி வரவேண்டிய பிளேயர் இப்படி ஆகிட்டியே.. முதலில் அதை நிறுத்து.. பிரித்திவி’க்கு வாசிம் அக்ரம் அட்வைஸ்

Wasim Akram 7
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரிசப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 6 வெற்றி 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு டெல்லி தள்ளப்பட்டுள்ளது. அந்த அணிக்காக இந்த வருடம் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடிய பிரிதிவி ஷா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக 7 போட்டிகளில் வெறும் 185 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. அதனால் அவரை நீக்கிய டெல்லி நிர்வாகம் 22 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க்கை ஓப்பனங்கில் களமிறக்கியுள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் பிரிதிவி ஷா சுமாராக செயல்பட்டு கம்பேக் கொடுக்க தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அக்ரம் அட்வைஸ்:
இந்நிலையில் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்த அவர் அடுத்த வருடமே சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவர் சேவாக், சச்சின், லாரா கலந்த கலவை போல் விளையாடுவதாக அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைக்க முடியாத அளவுக்கு சொதப்பிய பிரித்வி ஷா ஸ்விங் பந்துகளில் போல்ட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதனால் பெரியளவில் வரவேண்டிய அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கூட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகிறார் என்று சொல்லலாம். இந்நிலையில் பார்ட்டியில் ஈடுபடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி உள்ளூரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் பிரிதிவி ஷா நல்ல வீரராக உருவெடுக்க முடியும் என்று வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த வருடம் அவரை நான் நெருக்கமாக பார்க்கவில்லை. ஆனால் அவர் அடிப்படைக்கு மீண்டும் செல்ல வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். பார்ட்டியில் ஈடுபடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். தமக்குள் நிறைய கிரிக்கெட்டை வைத்துள்ள அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாட வேண்டும். அங்கே நிறைய சதங்கள் அடித்து கம்பேக் கொடுப்பது மட்டுமே ஒரே வழியாகும்”

இதையும் படிங்க: நான் இல்லங்க.. பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ், இஷான் கிஷானை நீக்கியது அவர் தான்.. ஜெய் ஷா பேட்டி

“வேறு குறுக்கு வழி கிடையாது. தற்போதைக்கு அவர் நிறைய விளையாடி தன் மீது கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு பெற்ற பின் நீங்கள் எவ்வளவு பார்ட்டியில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். யாரும் கேட்க மாட்டார்கள்” என்று கூறினார். கடைசியாக இந்திய அணிக்காக பிரித்வி ஷா 2021 ஜூன் மாதம் விளையாடியிருந்தார். தற்போது ஜெய்ஸ்வால், கில் போன்றவர்கள் வந்து விட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement