இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உங்களை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று இசான் கிசானுக்கு பயிற்சி ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார்.
ஆனால் அதைக் கேட்காத இஷான் கிசான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக குஜராத்துக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது மத்திய சம்பள ஒப்பந்தத்தில் ஒப்பந்தமாகியுள்ள அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளிப்படையாக கேட்டுக்கொண்டார். அப்போதும் இசான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை.
ஜெய் ஷா பதில்:
மறுபுறம் இங்கிலாந்து தொடரில் காயமடைந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர் விரைவில் குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவரும் அதைக் கேட்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் இந்த இருவரையும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியது. இந்நிலையில் ஸ்ரேயாஸ், இஷான் கிசான் ஆகியோரை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தான் பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கியதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அரசியலமைப்பை சரி பார்க்கலாம். அந்த முடிவு அஜித் அகர்கரிடம் உள்ளது. இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு. செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலை. புதிதாக இணைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தவிர்க்க முடியாதவர்கள்”
“அதே போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னை பிசிசிஐ கருதினால் நான் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இந்தியாவுக்காக விளையாட அதற்கு தகுந்த உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்காத இசான் கிசான் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை வீரராக விளையாடலாம்”
இதையும் படிங்க: 10 வருடம்.. ஆர்சிபி, டெல்லியை விட மோசம்.. அடி வாங்குதற்காகவே விளையாடி வரும் பஞ்சாப்.. 2 மோசமான சாதனை
“ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு நீங்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபிக்க வேண்டும். அதை சரியாக செய்பவர்களையே சரியான வீரர்களாக கருதுவோம். மும்பை போட்டி முடிந்ததும் இசான் கிசானிடம் மற்ற வீரர்களை போலவே நான் நட்பாக பேசினேன். வேறு எதுவுமில்லை” என்று கூறினார்.