10 வருடம்.. ஆர்சிபி, டெல்லியை விட மோசம்.. அடி வாங்குதற்காகவே விளையாடி வரும் பஞ்சாப்.. 2 மோசமான சாதனை

PBKS 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் 2 அணிகளாக லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. குறிப்பாக முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் 4 வெற்றி 8 தோல்விகளை பதிவு செய்து 2வது அணியாக வெளியேறியது.

இந்த வருடம் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் சில போட்டிகளில் விளையாடியதும் காயமடைந்து வெளியேறியது பின்னடைவாக அமைந்தது. அவருக்கு பதிலாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவை நம்பாத பஞ்சாப் நிர்வாகம் இங்கிலாந்து வீரர் ஷாம் கரணிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அவருடைய தலைமையில் கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த பஞ்சாப் உலக சாதனை படைத்தது.

- Advertisement -

பரிதாப பஞ்சாப்:
மற்ற படி பெரும்பாலான போட்டிகளில் தவறுதலாக வாங்கப்பட்ட சசாங் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டனர். ஆனால் அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடத் தவறியதால் 8 தோல்விகளை பதிவு செய்த பஞ்சாப் பரிதாபமாக வெளியேறியது. சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

ஆனால் அதன் பின் 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 2024* என தொடர்ந்து 10வது வருடமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 10 சீசன்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத முதல் அணி என்ற படுமோசமான சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. பஞ்சாப்புக்கு அடுத்தபடியாக டெல்லி 2013 – 2018 வரை 6 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

இது போக மே ஒன்பதாம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 241 ரன்கள் கொடுத்த பஞ்சாப் அணி கடைசியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக (29) முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கிய அணி என்ற மோசமான உலக சாதனையும் பஞ்சாப் படைத்துள்ளது.

இதையும் படிங்க: இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்படுமா? ராகுல் டிராவிட்டுக்கு பின் புதிய பயிற்சியாளர் யார்? ஜெய் ஷா பதில்

இதற்கு முன் பெங்களூரு அணி 28 முறை 200+ ரன்களை கொடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக கொண்ட பஞ்சாப் அணி ஆரம்ப காலம் முதலே மற்ற அணிகளிடம் அடி வாங்கி வருவது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. அதனால் பஞ்சாப் அணியை நினைக்கும் போதெல்லாம் ப்ரீத்தி ஜிந்தாவை பற்றி நினைத்து ரசிகர்கள் ஆதங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement