இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்படுமா? ராகுல் டிராவிட்டுக்கு பின் புதிய பயிற்சியாளர் யார்? ஜெய் ஷா பதில்

Jay Shah 2
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வழக்கத்திற்கு மாறாக பேட்ஸ்மேன்கள் காட்டுத்தனமாக பலர்களை அடித்து நொறுக்கி வருகிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக ஹைதராபாத் அணி பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

அத்துடன் டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் குவித்த அந்த அணி லக்னோவுக்கு 166 ரன்களை 9.4 ஓவரில் சேசிங் சாதனைகளை படைத்தது. இப்படி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதற்கு கடந்த வருடம் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக இருப்பதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஏனெனில் அந்த விதிமுறையால் அனைத்து அணிகளும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுகின்றன.

- Advertisement -

ஜெய் ஷா பதில்:
சொல்லப்போனால் அந்த விதிமுறையால் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடைபடுவதாகவும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விமர்சித்திருந்தார். இந்நிலையில் அணி நிர்வாகிகளிடம் விவாதித்து அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் இம்பேக்ட் வீரர் விதிமுறையில் தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிகிறது.

எனவே புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஜெய் ஷா கூறியுள்ளார். அதற்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ராகுல் டிராவிட்டின் பதவி ஜூலையுடன் நிறைவு பெறுகிறது. ஒருவேளை அவர் விரும்பினால் மீண்டும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய அணியின் பயிற்சியாளர் இந்தியரா வெளிநாட்டவரா என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது”

- Advertisement -

“அதை பிசிசிஐயின் ஆலோசனை கமிட்டி தீர்மானம் செய்வார்கள். இம்பேக்ட் விதிமுறை சோதனையின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் 2 புதிய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதை தொடரலாமா வேண்டாமா என்பது பற்றி ஐபிஎல் தொடரின் பங்குதாரர்கள், அணி நிர்வாகங்கள், ஒளிபரப்பு உரிமையாளர்களுடன் நாங்கள் விவாதிக்க உள்ளோம்”

இதையும் படிங்க: நீங்க வேணா பாருங்க இன்னைக்கு அவரு அசத்துவாரு.. சி.எஸ்.கே அணிக்கு எச்சரிக்கை வழங்கிய – கேரி கிறிஸ்டன்

“அது நிரந்தரமான விதியல்ல. ஆனால் இதுவரை அந்த விதிமுறைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 3 விதமான அணிகளுக்கும் வெவ்வேறு பயிற்சியாளர்களை நியமிப்பது பற்றி ஆலோசனை கமிட்டி முடிவெடுக்கும். இந்தியாவுக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் நம்மிடம் உள்ளனர். எனவே தற்போதைக்கு அது போன்ற சூழ்நிலை இந்தியாவில் ஏற்படவில்லை” என்று கூறினார்.

Advertisement