நீங்க வேணா பாருங்க இன்னைக்கு அவரு அசத்துவாரு.. சி.எஸ்.கே அணிக்கு எச்சரிக்கை வழங்கிய – கேரி கிறிஸ்டன்

Kirsten
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகளில் விளையாட எந்த நான்கு அணிகள் தேர்வடைய போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வேளையில் சென்னை அணி இன்று முக்கிய லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் :

59-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 11 போட்டியில் விளையாடி 7 தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று மே 10-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால் இந்த தொடரில் இருந்து வெளியேறிவிடும். அதே வேளையில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும். எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் தனது பேட்டிங்கில் மிளிர்வார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கேப்டனாக அவர் கைதேர்ந்து வர கொஞ்ச நேரம் பிடிக்கலாம். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை இனிவரும் இரண்டு போட்டியிலும் வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : உங்களோட 2 கேள்விக்கும் பதில் கொடுத்துட்டாரு.. இனிமேல் விராட் கோலி பற்றி பேசாதீங்க.. எச்சரித்த கைஃப்

நிச்சயம் அவர் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் ஜொலிப்பார். எங்களது அணியில் முகமது ஷமி இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் பல்வேறு முக்கிய வெற்றிகளில் பங்காற்றி இருக்கிறார். இந்த ஆண்டு அவர் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இளம் வீரர்களை கொண்ட எங்களது அணி இந்த சரிவிலிருந்து நிச்சயம் மீண்டும் வரும் என கேரி கிறிஸ்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement