அவர் டீம்க்கு வந்த பர்ஸ்ட் நாள்ல இருந்து பிரமாதமா ஆடிட்டு வராரு.. வெற்றிக்கு பிறகு பாராட்டிய – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க ஜேக் பிரேசர் மெக்கர்க் 84 ரன்களையும், ஸ்டப்ஸ் 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன் காரணமாக டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : நாங்கள் முதலில் பேட்டிங் செய்து 250 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் நாளுக்கு நாள் போட்டி கடினமாகி வருகிறது.

- Advertisement -

வேகப்பந்து வீச்சிற்கு எதிராக என்னால் ஸ்டம்பிற்கு அருகில் நின்று என்னால் கீப்பிங் செய்ய முடியும். ஆனாலும் பவுலரும் தவறான பந்துகளை வீசக்கூடாது என்ற நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். டிம் டேவிட் போன்ற அதிரடியான வீரர்கள் கிரீஸை பயன்படுத்தி இறங்கி ஆடுவார்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக அந்த திட்டம் வேலை செய்தது.

இதையும் படிங்க : 196 ரன்ஸ்.. ராஜஸ்தானுக்கு எதிராக க்ளாஸ் காட்டிய கேஎல் ராகுல்.. கிறிஸ் கெயிலை முந்தி அபார சாதனை

ஜேக் பிரேசர் மெக்கர்க் எங்களது அணியில் வந்த முதல் நாளிலிருந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ஆட்டம் மெருகேறி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் பிளேஆப் சுற்றை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவது தெரிகிறது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement