சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய டூப்ளஸ்ஸிஸ் ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு – என்ன சொல்லியிருக்காரு?

Faf
Advertisement

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வருகின்ற மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் அணியின் அனுபவ வீரர் டு பிளிசிஸ் சென்னை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

faf

ஆனால் இறுதியில் அவரை பெங்களூர் அணிக்காக 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் அவரது இந்த இழப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளிசிஸ் 131 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2935 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி கடந்த இரண்டு சீசன்களாக சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் கொடுத்த அதிரடி துவக்கமே காரணமாக இருந்தது. 2020ஆம் ஆண்டு சீசனில் 449 ரன்களை குவித்த அவர் 2021 ஆம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்றிய போது கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

ஏனெனில் கடந்த தொடரில் 6 அரைசதங்களுடன் அவர் 633 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவி இருந்தார் என்று கூறினால் அது மிகையல்ல. அந்த வகையில் மிகச் சிறப்பான இவரை சென்னை அணி தவறவிட்டது ரசிகர்களின் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சென்னை அணியில் இருந்து வெளியேறி பெங்களூரு அணிகள் விளையாட இருக்கும் அவர் தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு பிரியாவிடை பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசிய அந்த வீடியோவில் : எல்லோருக்கும் காலை வணக்கம். சென்னை அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை அணியில் விளையாடியதை எப்போதும் மறக்க முடியாதது. சிஎஸ்கே-வில் என்னுடைய நாட்களை மகிழ்ச்சியாக செலவு செய்தேன். எனக்கு நிறைய நினைவுகள் சென்னை அணியுடன் இருக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் உங்களுடன் இணைய வேண்டும் என எதிர்பார்ப்பதாக தனது உருக்கமான பேட்டி அவர் பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க : நிறைவடைந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் : சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்த வீரர்கள் யார்? – முழு லிஸ்ட் இதோ

அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே எவ்வளவு போட்டி போட்டாலும் இறுதியில் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து இருந்தாலும் 37 வயதாகும் அவர் தனது சிறப்பான உடற்தகுதியுடன் அதிரடியாக விளையாடி வருவதால் பெங்களூரு அணிக்கு அவரது இணைப்பு ஒரு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement