சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் மே 1-ஆம் தேதி (இன்று) ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்துள்ளது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களையும், ரஹானே 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பஞ்சாப் அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் அறிமுகமான சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட் க்ளீசன் சிஎஸ்கே அணி சார்பாக விசித்திரமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பதிரானா காயம் காரணமாக விளையாடாத வேளையில் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசன் அறிமுகமாகி உள்ளார். இந்த அறிமுகத்தின் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : 162 ரன்ஸ்.. கிங் கோலியை முந்தி.. தோனியால் முடியாத சிகரம்.. சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் வரலாற்று சாதனை
2014-ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அதிக வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் (ரிச்சர்ட் க்ளீசன்) தன்னுடைய 36-வது வயது 151-வது நாளில் அறிமுகமாகி உள்ளார். இதற்கு முன்னதாக சிக்கந்தர் ராசா 36-வது வயது 342 நாட்களில் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.