- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எட்ஜ்பேஸ்டன் டெஸ்ட் போட்டியில் இதுதான் மறக்க முடியாத ஸ்பெஷல் முமென்ட்.. சிராஜை பாராட்டிய – சுப்மன் கில்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

வாழ்நாள் முழுவதும் இந்த வெற்றியை மறக்க முடியாது : சுப்மன் கில்

இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இதன் காரணமாக தற்போது இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்று கணக்கில் சமநிலை உள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூலை 10-ஆம் தேதி துவங்க இருக்கிறது. எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இதுவரை வெற்றியே பெறாத இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது வரலாற்று சாதனையாக மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி இளம் வீரர்களை கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்த அணி பெற்ற வெற்றிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கேப்டனாக பெற்ற இந்த முதல் வெற்றியை தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்றும் இந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களையும் நினைத்து பெருமைப்படுவதாகவும் கேப்டன் சுப்மன் கில் ஓய்வறையில் வீரர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

- Advertisement -

அப்படி அணி வீரர்களிடம் சுப்மன் கில் பேசியதாவது : இந்த வெற்றியை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு மிகச் சிறப்பான போட்டியை நாம் இங்கு விளையாடி உள்ளோம். நான் எப்போது ஓய்வுபெற விரும்புகிறானோ அப்போது இந்த மகிழ்ச்சியான வெற்றியை நினைத்துப் பார்ப்பேன். அந்த அளவிற்கு இந்த போட்டி எனக்கு ஸ்பெஷலான ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த எட்ஜ்பேஸ்டன் போட்டியில் ஸ்பெஷலான விடயம் யாதெனில் :

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ஹசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த வியான் முல்டர் – லாராவை தகர்க்க வாய்ப்பு

முகமது சிராஜ் பிடித்த அந்த கேட்ச் தான். அதுவும் என்னால் மறக்கவே முடியாது. அணியில் விளையாடிய ஒவ்வொரு வீரரும் மிகச் சிறப்பாக விளையாடியதை எண்ணி பெருமை அடைகிறேன். இனியும் நாம் இதே வெற்றிப்பாதையில் தொடர்வோம் என்ற நம்பிக்கையையும் இருப்பதாக சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -