- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து மண்ணில் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைத்தே ஆக வேண்டும் – காரணம் சொன்ன கவாஸ்கர்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி உலகின் தரமான பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு அயர்லாந்து தொடருக்கான டி20 இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு குடுங்க : சுனில் கவாஸ்கர்

ஆனாலும் நடைபெற்று முடிந்த அயர்லாந்து தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்த வேளையில் அந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த இங்கிலாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைக்க வேண்டும் என்று சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : அயர்லாந்து தொடரில் நமது அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைத்தே ஆக வேண்டும்.

ஒரு சில வாய்ப்புகளை அவருக்கு வழங்கும் போது அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வராமல் கூட போகலாம். ஆனால் தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் அவருக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும். பார்மில் இல்லாத வீரர்களுக்கு பதிலாக அவரை சேர்த்து விளையாட வைக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 1 விக்கெட் போதும்.. ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்போகும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

தற்போதைய இந்திய அணிக்கு நிச்சயம் அவர் தேவை என்று நினைக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான பார்மை தொடர்ந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைப்பார் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -