- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்தும் நிதீஷ் ரெட்டி விலக வாய்ப்பு.. காரணம் என்ன? – விவரம் இதோ

இந்திய அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார். ஆனால் அந்த தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியை தவறவிட்ட நிதீஷ் ரெட்டி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரையும் தவறவிட்டார்.

இங்கிலாந்து தொடரை தவறவிடும் நிதீஷ் ரெட்டி :

அவரது காயத்திற்கான சிகிச்சையை அவர் இன்னும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்திய அணியின் அனுபவ ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக விளையாட முடியாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா விளையாட முடியாமல் இருக்கும் வேளையில் நிதிஷ் ரெட்டி தான் அவரது இடத்தை நிரப்பும் முக்கிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படுகிறார். இவ்வேளையில் பாண்டியாவை தொடர்ந்து நிதீஷ் ரெட்டிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக மாறியுள்ளது.

இன்னும் பெங்களூரு சென்று தனது காயத்திற்கான சிகிச்சையை ஆரம்பிக்காத நிதிஷ் ரெட்டி இந்த வாரம் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொள்வார் என்பதனால் அவரது உடற்குதியை உடனடியாக நிரூபிக்க முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : திலக் வர்மா அப்படி விளையாடுனது ரொம்ப தப்பு.. அதனால் தான் இந்திய அணி தோற்றது – சீக்கா ஸ்ரீகாந்த் விளாசல்

இதன் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை அவர் தவற விடுவார் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது ஜூலை 14-ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -