
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது மழை காரணமாக நடைபெறாமல் போன நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ஜூலை 7-ஆம் தேதியான நாளை நாட்டிங்காம் நகரில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இவ்வேளையில் நாளைய இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டாவது போட்டியின் போது பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரவி பிஷ்னாய் 4 ஓவர்களில் 60 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
அதுமட்டும் இல்லாமல் அவர் வீசிய 17 வது ஓவரில் 29 ரன்களை விட்டுக் கொடுத்ததே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியதால் அவர் நாளைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தவிர்த்து பெரியளவில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நாளைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இந்திய அணி செய்ஞ்ச தப்பையே திரும்பி திரும்பி செய்றாங்க.. துவக்க வீரர்கள் குறித்து – முகமது கைப் விமர்சனம்
1) அபிஷேக் சர்மா, 2) வைபவ் சூர்யவன்ஷி, 3) இஷான் கிஷன், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) திலக் வர்மா, 6) ஷிவம் துபே, 7) அக்சர் படேல், 8) ஹர்ஷித் ராணா, 9) பிரின்ஸ் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி.