- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நிதீஷ் ரெட்டி விலகல் – மாற்றுவீரர் அறிவிப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து எஞ்சியுள்ள 3 ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.

ஒருநாள் தொடரில் இருந்து விலகிய நிதீஷ் ரெட்டி :

இந்த டி20 தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து அணிக்க எதிராக விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் போது காயத்தை சந்தித்த நிதீஷ் ரெட்டி அதன்பிறகு அந்த காயத்திற்கான சிகிச்சையை தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் செய்து வருகிறார். இவ்வேளையில் இந்த இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்னதாக அவரால் முழு உடற்தகுதியை எட்ட முடியாது என்பதன் காரணமாக அவர் இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மாற்று வீரராக டி20 அணியில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சிவம் துபே தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாளைய 3 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்.. உத்தேச பிளேயிங் லெவன் இதோ

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஷிவம் துபே இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 43 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -