இன்னும் 1 விக்கெட் போதும்.. ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்போகும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூலை 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் இடம் பிடித்துள்ளார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜஸ்ப்ரீத் பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருநாள் போட்டியில் அவர் கம்பேக் கொடுக்க இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு மாபெரும் சாதனையை இந்திய அணிக்காக நிகழ்த்த காத்திருக்கிறார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்தும் நிதீஷ் ரெட்டி விலக வாய்ப்பு.. காரணம் என்ன? – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 150 விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனை பட்டியலிலும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement