- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 20 ரன்கள் மட்டுமே தேவை.. இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரோஹித் சர்மா

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய டி20 வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா :

இந்த டி20 தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரரான ரோகித் சர்மாவும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த அவர் இந்த இங்கிலாந்து தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 20 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக்கின் ஒரு சாதனையை தகர்த்து முன்னேறி செல்ல காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை ரோகித் சர்மா தற்போது 11720 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

இவருக்கு முன்னதாக ஏழாம் இடத்தில் இன்சமாம் உல் ஹக் 11,739 ரன்களுடன் இருக்கும் நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் 20 ரன்களை ரோஹித் சர்மா அடிக்கும் பட்சத்தில் 11740 ரன்களுடன் இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா ஏழாம் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -