விராட் கோலி மற்றும் ஹசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த வியான் முல்டர் – லாராவை தகர்க்க வாய்ப்பு

Wiaan Mulder
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் வியான் முல்டர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 6-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணியானது :

- Advertisement -

இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்களை குவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் வியான் முல்டர் தற்போது 334 பந்துகளை சந்தித்து 49 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 367 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தில் இருக்கும் பிரைன் லாராவின் 400 ரன்கள் என்கிற சாதனையை எட்ட அவருக்கு வெறும் 33 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அவரது அந்த சாதனை இன்று முறியடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரான ஹாசிம் ஆம்லா ஆகியோரது சாதனையையும் இன்று முல்டர் முறியடித்துள்ளார். அந்த வகையில் முல்டர் செய்த சாதனை யாதெனில் : டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் விளாசிய வீரராக விராட் கோலி 256 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா உள்ளே வரும் பட்சத்தில் வெளியேறப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ

அவரது இந்த சாதனையை வியான் முல்டர் இன்று கடந்துள்ளார். அதுமட்டும் இன்றி தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக ஹாசிம் ஆம்லா 311 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த வேளையில் அவரை முறியடித்த வியான் முல்டர் 360 ரன்களை கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement