
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை ஒன்றாம் தேதியான இன்று இரவு டர்ஹாம் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்தது.
டி20 போட்டிகளில் உலக சாம்பியனான இந்திய அணி அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்த வேளையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின் போது இந்திய அணி சார்பாக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அயர்லாந்து தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் 5 ரன்களையும், இரண்டாவது போட்டியில் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு வழங்கப்படும் திட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டிக்கான துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்குவார். அதனால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார்.
இதையும் படிங்க : இன்னும் 20 ரன்கள் மட்டுமே தேவை.. இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரோஹித் சர்மா
அப்படி வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் சச்சினை பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.