- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்சிபி’யிடம் பஞ்சாப் தோற்க இதான் காரணம்.. இன்னும் போரில் தோற்கல.. மறக்காம வருவோம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று பெங்களூரு சாதனைப் படைத்தது. மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்து பஞ்சாப்பை 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

பஞ்சாப்புக்கு பிரியான்ஸ் ஆர்யா 7, ஜோஸ் இங்லிஷ் 4, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2, நேஹல் வதேரா 8, சசாங் சிங் 3, முஷீர் கான் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஓமர்சாய் 18, பிரப்சிம்ரன் சிங் 18, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்களை எடுத்தார்கள். பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட், சூயஸ் சர்மா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

பஞ்சாப் தோல்வி:

அடுத்து விளையாடிய பெங்களூரு 10 ஓவரில் 106-2 ரன்களை எடுத்து 2016க்குப்பின் ஃபைனல் சென்றது. அந்த அணிக்கு பில் சால்ட் 56*, விராட் கோலி 12, மயங் அகர்கர் 19, கேப்டன் ரஜத் படிதார் 15* ரன்களை விளாசினர். மறுபுறம் போராடாமலேயே தோற்ற பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றில் 4வது தோல்வியை பதிவு செய்து குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது தோல்வியைக் கொடுத்ததாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்த தோல்விப் பாடத்தை மறக்காமல் மனதில் வைத்து குவாலிபயர் 2 போட்டியில் வென்று ஃபைனல் வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது மறக்கக்கூடிய நாள் அல்ல. நாங்கள் வரைபலைகைக்கு மீண்டும் செல்ல வேண்டும்”

- Advertisement -

இன்னும் போரில் தோற்கல:

“முதல் இன்னிங்ஸில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். அது பற்றி நிறைய படிக்க வேண்டும். உண்மையில் என்னுடைய முடிவுகள், திட்டமிடுதல் பற்றி நான் எந்த சந்தேகமும் படவில்லை. களத்திற்கு வெளியே நாங்கள் வகுத்த திட்டங்கள் புள்ளியானது என்று நினைக்கிறேன். இலக்கு குறைவாக இருந்ததால் எங்களுடைய பவுலர்களையும் குறை சொல்ல முடியாது”

இதையும் படிங்க: பஞ்சாப்பை ஈஸியா சாய்க்க இதான் கரணம்.. ஃபைனலில் ஜெய்ச்சுட்டு மொத்தமான கொண்டாடுவோம்.. படிதார் பேட்டி

“இது போன்ற பிட்ச்சில் பேட்டிங் செய்வது பற்றி நாங்கள் வேலை செய்ய வேண்டும். இந்த மைதானத்தில் நாங்கள் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மாறுபட்ட பவுன்ஸ் இருந்தது. இருப்பினும் அதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில் தொழில்முறையில் விளையாடும் நீங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடி எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட வேண்டும். நாங்கள் இப்போட்டியில் தோற்றுள்ளோம். ஆனால் (ஐபிஎல்) போரில் தோற்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -