பஞ்சாப்பை ஈஸியா சாய்க்க இதான் காரணம்.. ஃபைனலில் ஜெய்ச்சுட்டு மொத்தமா கொண்டாடுவோம்.. படிதார் பேட்டி

Rajat patidar 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய பெங்களூரு ஃபைனலுக்கு நேரடியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்து பஞ்சாப்பை 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

பஞ்சாப்புக்கு பிரியான்ஸ் ஆர்யா 7, ஜோஸ் இங்லிஷ் 4, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2, நேஹல் வதேரா 8, சசாங் சிங் 3, முஷீர் கான் 0 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஓமர்சாய் 18, பிரப்சிம்ரன் சிங் 18, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்களை எடுத்தார்கள். பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட், சூயஸ் சர்மா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:

அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 56*, விராட் கோலி 12, மயங் அகர்கர் 19, கேப்டன் ரஜத் படிதார் 15* ரன்களை விளாசினர். அதனால் 10 ஓவரில் 106/2 ரன்களை எடுத்த பெங்களூரு 9 வருடங்கள் கழித்து வரலாற்றில் 4வது முறையாக ஃபைனல் சென்றது. மறுபுறம் பஞ்சாப் குவாலிபயர் 2 போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் வகுத்த திட்டங்களை தங்களுடைய பவுலர்கள் சரியாக செயல்படுத்தியதே காரணம் என்று ஆர்சிபி கேப்டன் படிதார் கூறியுள்ளார். எங்கு சென்றாலும் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான திட்டங்களைக் கொண்டிருந்தோம்”

- Advertisement -

ரசிகர்களுக்கு நன்றி:

“வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்ச்சை சரியாகப் பயன்படுத்தினர். சூயஸ் பவுலிங் செய்த லைன், லென்த் ஆகியவை சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக அவருடைய பௌலிங் பற்றி நான் தெளிவாக இருந்தேன். ஸ்டம்ப்பை டார்கெட் செய்வதே அவருடைய பலமாகும். அவருக்கு தெளிவான ஐடியாக்களைக் கொடுக்க விரும்பும் நான் குழப்ப விரும்புவதில்லை. எனவே அவர் சில ரன்களை கொடுத்தால் கவலையில்லை. இந்தத் தொடர் முழுவதுமே நாங்கள் நிறைய பயிற்சிகளை செய்துள்ளோம்”

இதையும் படிங்க: 10 ஓவரில் 106 ரன்ஸ்.. பஞ்சாப்பை ஓடவிட்டு ஃபைனல் சென்ற ஆர்சிபி.. 9 வருடம் கழித்து சாதனை.. கோப்பை உறுதியானதா?

“அதனால் ஒரு நாள் பயிற்சி செய்யாதது உங்களைப் பாதிக்காது. பில் சால்ட் பெரும்பாலான போட்டிகளில் துவக்கத்தைக் கொடுக்கும் விதம் சிறப்பானது. நான் அவருடைய பெரிய ரசிகன். அவரைப் பார்ப்பது விருந்தாக இருக்கும். ஆர்சிபி ரசிகர்களுக்கு எப்போதும் நான் நன்றி சொல்வேன். ஏனெனில் சின்னசாமி மட்டுமின்றி நாங்கள் விளையாடும் அனைத்து மைதானங்களிலும் அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இன்னும் ஒரு போட்டியில் வென்று விட்டு நாங்கள் ஒன்றாக கொண்டாடுவோம்” என்று கூறினார்.

Advertisement