- Advertisement -
ஐ.பி.எல்

எல்லாத்தையும் சிஎஸ்கே மேல காட்டுவோம்.. பஞ்சாப்பிடம் வெற்றியை கோட்டை விட இதான் காரணம்.. சாம்சன் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் 59வது போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் அபாரமாக விளையாடி 220 ரன்களை எடுத்தார்கள். அதிகபட்சமாக நேஹல் வதேரா 70, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

அவர்களுடன் சசாங் சிங் 59*, ஓமர்சாய் 21* ரன்களை எடுத்து ஃபினிஷிங் கொடுத்தார்கள். அடுத்து விளையாடிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 50, சூர்யவன்சி 40 ரன்கள் அடித்து அபாரமான துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 20, ரியான் பராக் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:

லோயர் மிடில் ஆர்டரில் துருவ் ஜூரேல் 53 ரன்களை எடுத்தும் ஹெட்மயர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள். அதனால் 20 ஓவரில் 209/7 ரன்களுக்கு ராஜஸ்தானை சுருட்டி 8வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மறுபுறம் 8வது தோல்வியைப் பதிவு செய்த ராஜஸ்தான் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக தோல்வியை சந்தித்த அணியாக மோசமான சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் நன்றாக துவங்கியும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி ஃபினிஷிங் செய்யத் தவறியதே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முன்னேறுவதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு முன் கடைசிப் போட்டியில் எஞ்சியுள்ள மொத்த திறமைகளையும் காட்டி சிஎஸ்கே அணியை தோற்கடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

நிறைய முன்னேறனும்:

இது பற்றி சாம்சன் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நன்றாக துவங்கினோம். பவர்பிளேவில் 90 ரன்கள் அடித்து கொடுத்த எங்களுடைய துவக்க வீரர்களிடம் இதற்கு மேல் எதையும் கேட்க முடியாது. ஆனால் பிளே முடிந்ததும் எங்களால் வேகத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்த இலக்கு சேசிங் செய்யக்கூடியதாகும். இருப்பினும் பிட்ச் வித்தியாசமாக இன்று விளையாடியது”

இதையும் படிங்க: பாடி லாங்குவேஜை விட்றாதீங்கன்னு சொல்லிருக்கேன்.. ராஜஸ்தான் சாய்க்க அவர் தான் காரணம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

“எங்களிடம் இருக்கும் பவர் ஹிட்டர்களுக்கு இது எட்டக்கூடிய இலக்கு. கடைசி நேரத்தில் அதை அடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனாலும் அதை நாங்கள் செய்ய வேண்டும். எங்களுடைய சில அனுபவமிக்க வீரர்கள் தங்களுடைய ஃபினிஷிங் வேலையை செய்ய வேண்டும். அடுத்த வருடத்திற்கு முன்னேற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் எதையும் அதிகம் முயற்சிக்க முடியாது. சிஎஸ்கே அணிக்கு எதிரானப் போட்டியை வெல்வதே முதல் முன்னுரிமையாகும்” எனக் கூறினார்.

- Advertisement -