பாடி லாங்குவேஜை விட்றாதீங்கன்னு சொல்லிருக்கேன்.. ராஜஸ்தானை சாய்க்க அவர் தான் காரணம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

Shreyas Iyer
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் 59வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 220 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நேஹல் வதேரா 70, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்தனர்.

கடைசியில் சசாங் சிங் 59*, ஓமர்சாய் 21* ரன்களை எடுத்து ஃபினிஷிங் கொடுத்தார்கள். அடுத்து விளையாடிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 50, சூர்யவன்சி 40 ரன்கள் அடித்து அபாரமான துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 20, ரியான் பராக் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

பாடி லாங்குவேஜ்:

லோயர் ஆர்டரில் துருவ் ஜூரேல் 53 ரன்களை எடுத்துப் போராடினார். ஆனால் ஹெட்மயர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் ஃபினிசிங் செய்ய தவறினார். அதனால் 20 ஓவரில் 209/7 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் தங்களுடைய 8வது தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 8வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில் கைமீறிய தருணங்களில் பயந்தது போல் இல்லாமல் தைரியமான பாடி லாங்குவேஜை வெளிப்படுத்துமாறு வீரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யவன்சி – ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடிய போது அபாரமாக பௌலிங் செய்து 3 விக்கெட்டுகள் எடுத்த ஹர்ப்ரீத் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஸ்ரேயாஸ் பாராட்டு:

“பாடி லாங்குவேஜை நேர்மறையாக வைத்துக் கொள்ளுங்கள் என எங்கள் வீரர்களிடம் மெசேஜ் கொடுத்துள்ளேன். ஏனெனில் அது உங்களிடம் சரிந்தது போல் தெரிந்தால் உண்மையாகவே வெற்றி சென்று விடும். அந்த வகையில் எங்களுடைய வீரர்கள் அனைவரும் தைரியமான அணுகுமுறையை காட்டுவதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஹர்ப்ரீத் தொடர்ச்சியாக வலைப்பயிற்சியில் அசத்தி வருகிறார்”

“தனக்குத்தானே சிறப்பாக செயல்பட விரும்பும் அவர் வாய்ப்புக்காக காத்திருந்தார். இன்று கிடைத்த வாய்ப்பில் அசத்தியுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவருடைய மனநிலை போட்டி முழுவதும் நன்றாக இருந்தது. எங்களுக்கு ஓய்வு தேவைப்பட்ட சமயத்தில் இடைவெளி கிடைத்தது. மீண்டும் ஐபிஎல் துவங்கிய போது எங்களுடைய வீரர்கள் அதே பழைய அணுகுமுறை மற்றும் வேகத்துடன் வந்துள்ளனர்”

இதையும் படிங்க: முன்பு ஹார்டிக் பாண்டியா.. இப்போ ஜஸ்ப்ரீத் பும்ரா.. தொடரும் ஏமாற்றம் – இந்திய அணியில் என்னதான் நடக்குது?

“சூழ்நிலைகளைத் தாண்டி ஒன்றாக விளையாடினால் வெல்ல முடியும் என்பதை அவர்கள் காண்பிக்கின்றனர். ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களால் ரன்கள் அடிக்க முடியவில்லை. அதைத் தவிர்த்து போட்டியின் எந்த சூழ்நிலையையும் மாற்றி எங்களால் வெல்ல முடியும்” என்று கூறினார்.

Advertisement