- Advertisement -
ஐ.பி.எல்

ஈகோ காரணமா.. ரிஷப் பண்ட் 27 கோடிக்கு வாங்கியது ஏன்? அடுத்த கேப்டனா? லக்னோ உரிமையாளர் பேட்டி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அதில் இளம் இந்திய வீரர் ரிசப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக 27 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

டெல்லி அணிக்காக 2016 முதல் விளையாடி வந்த அவர் சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அவர் அதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

லக்னோ அணியில் பண்ட்:

இந்நிலையில் ரிஷப் பண்ட்டை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஈகோவில் வாங்கவில்லை என லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோன்கா தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட்டை தங்களுடைய அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இது ஒரு தனிப்பட்ட வீரரை பொறுத்தது கிடையாது. ஈகோவை பொறுத்தது கிடையாது. அதிக விலையுடைய வீரர் எங்களுடைய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக வாங்கினோமா? இல்லை. நாளின் இறுதியில் அது எங்களுடைய அணிக்கு அனைத்துமாக இல்லை. இவை அனைத்தும் சுறுசுறுப்பையும் எப்போதும் தோல்விக்கு போராடாமல் சரி சொல்லாத மனப்பான்மையை கொண்டு வரும் ஒரு வீரரை பற்றியது”

- Advertisement -

லக்னோ கேப்டன்:

“ஒரு மோசமான விபத்திலிருந்து மீண்டு வந்து சிறந்த வடிவத்திற்கு அவர் வந்ததே அவருடைய உறுதியை காட்டுகிறது. அப்படிப்பட்ட அவரின் மனோபாவத்தை தான் நாங்கள் விரும்புகிறோம். வெற்றியை பெற வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் தான் எங்கள் பக்கம் இருப்பதை விரும்புகிறோம். ஏலம் முடிந்த பின் எங்களுடைய அடுத்த கேப்டன் பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்த 2 திறமையுடைய ஜெய்ஸ்வால் குறைஞ்சது 40 செஞ்சூரி அடிப்பாரு.. நிறுத்தலன்னா ஆஸிக்கு கஷ்டம்.. மேக்ஸ்வெல்

அந்த வகையில் மோசமான விபத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடும் தைரியமும் வலிமையும் கொண்ட காரணத்தாலேயே ரிஷப் பண்ட்டை வாங்கியதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். அதே போல களத்திலும் நிறைய போட்டிகளில் அழுத்தமான தருணங்களில் ரிஷப் பண்ட் தம்முடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதன் காரணமாகவே லக்னோ அணிக்காக வாங்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் அடுத்த கேப்டனாகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -