இந்த 2 திறமையுடைய ஜெய்ஸ்வால் குறைஞ்சது 40 செஞ்சூரி அடிப்பாரு.. நிறுத்தலன்னா ஆஸிக்கு கஷ்டம்.. மேக்ஸ்வெல்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அவர் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய தனது முதல் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

- Advertisement -

மேக்ஸ்வெல் பாராட்டு:

கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்தார். அந்த வரிசையில் தற்போது மிகவும் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து தனது தரத்தை நிரூபித்துள்ளார். இந்நிலையில் அனைத்து சூழ்நிலைக்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளும் திறமை அவரிடம் இருப்பதாக கிளன் மேக்ஸ்வெல் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் வீக்னஸ் இல்லாத அளவுக்கு விளையாடும் திறமையும் அவரிடம் இருப்பதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். எனவே கேரியர் முடிவதற்குள் ஜெய்ஸ்வால் குறைந்தது 40 டெஸ்ட் சதங்களுக்கு மேல் அடிப்பார் என்று அவர் கணித்துள்ளார். எனவே அவரை நிறுத்தா விட்டால் ஆஸ்திரேலிய வெல்வது கடினம் என்றும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

40 சதங்கள்:

“ஜெய்ஸ்வால் அனேகமாக 40க்கும் மேற்பட்ட சதங்கள் அடித்து வித்தியாசமான சாதனைகளை எழுதக்கூடிய பயனாக இருக்கலாம். அவரிடம் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக்கொள்ளும் சிறப்பான திறமை இருக்கிறது. அதனால் அடுத்த சில போட்டிகளில் அவரை நிறுத்த முடியாவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும். அவர் நிறைய ஷாட்டுகளை அடிப்பது ஹைலைட் ஆகும்”

இதையும் படிங்க: என்னையா ஐபிஎல்’ல வாங்கல.. 7 போர்ஸ் 12 சிக்ஸ்.. 113 ரன்ஸ்.. கெய்ல், ரிஷப் பண்ட் சாதனையை உடைத்த வீரர்

“அதற்கிடையே அவர் சரியான பந்துகளை தவற விடுகிறார். அவருடைய கால் நகர்வு துல்லியமாக இருக்கிறது. அவருடைய பேட்டிங்கில் பெரிய வீக்னஸ் இருப்பதாக தெரியவில்லை. ஷார்ட் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் அவர் டிரைவ் அடித்து ஸ்பின்னர்களை நம்ப முடியாத வகையில் எதிர்கொள்கிறார். நீண்ட நேரம் அழுத்தத்தை உள்வாங்கியும் விளையாடுகிறார்” என்று கூறினார்.

Advertisement