- Advertisement -
ஐ.பி.எல்

விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த செயல்.. நெகிழ்ந்து போன லக்னோ அணியின் ஓனர் – விவரம் இதோ

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டதால் பெங்களூரு அணி தற்போதைய நிலையில் 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.

ஆர்.சி.பி ரசிகர்கள் செய்த செயலால் நெகிழ்ந்த லக்னோ ஓனர் :

அதேவேளையில் கொல்கத்தா அணியானது இந்த தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. இந்த போட்டியின் போது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரசிகர்கள் செய்த செயல் ஒன்று அனைவரையும் நெகிழ வைத்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று இந்த போட்டியை நேரில் காண வந்த விராட் கோலியின் ரசிகர்கள் அனைவரும் வழக்கமான சிகப்பு நிற ஆர்.சி.பி அணியின் ஜெர்சியை தவிர்த்து விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வை கௌரவிக்கும் வகையில் வெள்ளை நிற பதினெட்டாம் நம்பர் கொண்ட விராட் கோலியின் ஜெர்சியை அணிந்து மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இப்படி பெங்களூரு சின்னசாமி மைதானம் முழுக்க நேற்று வெள்ளை நிற ஜெர்சியுடன் ரசிகர்கள் நிரம்பி இருந்த வேளையில் மழையால் போட்டி தடைப்பட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தங்களது தலைவர் விராட் கோலிக்காக அவர்கள் கொடுத்த இந்த மரியாதை அனைவரது மத்தியிலும் கவனிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் செய்த இந்த செயலை கவனித்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்கள் செய்த மரியாதை குறித்து நெகிழ்ச்சியுடன் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்த அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : கவுதம் கம்பீரும் இல்ல.. வி.வி.எஸ் லக்ஷ்மணும் இல்ல.. இந்திய ஏ அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு – விவரம் இதோ

உண்மையிலேயே விராட் கோலியின் டெஸ்ட் கரியரை கௌரவிக்கும் வகையில் ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்சியில் வந்து மைதானத்தை நிரப்பியதை பார்க்கையில் மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் இந்த பரிசு மிகவும் எளிதாக தெரிந்தாலும் ஒரு பவர்ஃபுல்லான வீரருக்கு இதை விட மிகச் சிறப்பான பாராட்டு கிடைக்காது என அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -