கவுதம் கம்பீரும் இல்ல.. வி.வி.எஸ் லக்ஷ்மணும் இல்ல.. இந்திய ஏ அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு – விவரம் இதோ

VVS and Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்கள் ஆயுத்தமாகும் வகையில் இந்திய ஏ அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறயிருக்கும் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்திய ஏ அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் :

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ அணி ஏற்கனவே அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் அறிவிக்கப்பட்டு இம்மாத இறுதியில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல உள்ளது. இந்திய ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த பயிற்சி போட்டி இம்மாத இறுதியில் அங்கு நடைபெறவுள்ளது.

- Advertisement -

அதன் பின்னர் இந்திய ஏ அணியானது இந்திய முதன்மை அணியுடனும் ஒரு பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இப்படி மூன்று பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளதால் இந்திய ஏ வீரர்கள் விரைவில் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் அங்கு பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான வி.வி.எஸ் லக்ஷ்மணன் இந்த ஏ அணியுடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரும் இந்த தொடருக்கான இந்திய ஏ அணியுடன் பயணிக்கவில்லை.

- Advertisement -

அதனால் இந்திய ஏ அணிக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரான ரிஷிகேஷ் கனிட்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 8000 ரன்களுக்கு மேல் அடித்த அனுபவம் உடையவர்.

இதையும் படிங்க : விராட் கோலியின் மாபெரும் சாதனையை இன்று முறியடிக்க காத்திருக்கும் கே.எல் ராகுல் – விவரம் இதோ

அதுமட்டும் இன்றி இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ள அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் முக்கிய உறுப்பினராக இருப்பதால் அவர் இந்திய ஏ அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement