
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். எனவே அத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆகியோர் இடங்களில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்த்து காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மா விளையாடிய ஓப்பனிங் இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சிந்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடும் சுதர்சன் 617* ரன்கள் அடித்து அசத்தி வருகிறார். அதனால் விராட் கோலி, சூரியகுமார் உள்ளிட்ட நட்சத்திரங்களை எழுதியுள்ள அவர் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
மேலும் சமீப வருடங்களாகவே தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர் 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அரை சதமடித்து அசத்தினார். அப்படிப்பட்ட சாய் சுதர்சன் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் போல கிளாஸ் நிறைந்த பேட்டிங் செய்யும் திறமையைக் கொண்டிருப்பதாக சித்து கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சுனில் கவாஸ்கருக்கு பின் சாய் சுதர்சன் டெக்னிக்கல் அளவில் மிகவும் சரியாக விளையாடும் பேட்ஸ்மேன். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய வருகிறார். எந்தப் போட்டியிலும் தடுமாறியதாக தெரியவில்லை. டெக்னிக்கல் அளவில் அவர் பரிசளிக்கப்பட்ட வீரர். தற்சமயத்தில் அவரை விட சிறந்த இளம் பேட்ஸ்மேன் இல்லை”
“இங்கிலாந்துக்கு எதிராக நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் அவர் உங்களுடைய மீட்பாளராக இருப்பார். அவருக்கு ரோஹித் சர்மாவின் இடத்தைக் கொடுத்து துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் வீரராக விளையாடுவது மிகவும் கடினமான வேலை. அவர் இங்கிலாந்து கால சூழ்நிலையில் அசத்துவதற்கு தேவையான திறமையைக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இது அவமானம்ன்னு மெசேஜ் பண்ணேன்.. கோலி செஞ்சதை மற்ற இந்திய ஜெர்ஸியில் பார்க்க முடியாது.. ஸ்டோக்ஸ்
இதைத் தொடர்ந்து இந்தியா அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஏ அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக விளையாட சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தப் போட்டியில் அசத்தும் பட்சத்தில் இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்பலாம்.