இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு முன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். சமீபத்திய நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சுமாராக விளையாடிய அவர்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.
அதனால் இங்கிலாந்து தொடருக்கு முன் பிசிசிஐ அவர்களை கழற்றி விட முடிவெடுத்ததாக தெரிகிறது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் ஓய்வு காரணமாக நீங்கள் எங்களுடைய நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டீர்கள் என்பது அவமானமான விஷயம் என்று விராட் கோலிக்கு மெசேஜ் அனுப்பியதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
ஓய்வால் அவமானம்:
மேலும் விராட் கோலியை போல மற்ற இந்திய வீரர்கள் எதிரணிக்கு சவாலைக் கொடுத்து வெற்றிக்கான பசியுடன் போராடுவதை பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட அவரை இந்தியா மிஸ் செய்யும் என்று தெரிவிக்கும் பென் ஸ்டோக்ஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இம்முறை உங்களுக்கு எதிராக விளையாடாதது அவமானமாக இருக்கும் என்று விராட் கோலிக்கு நான் மெசேஜ் செய்தேன்”
“விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் போட்டியிடுவதை மகிழ்ச்சியாக கொண்டிருந்தோம். ஏனெனில் நாங்கள் களத்தில் ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டிருந்தோம். அது போர். விராட் கோலியின் சண்டையிடும் குணம், போட்டியைக் கொடுக்கும் தன்மை வெற்றிக்கான பசி போன்ற விஷயங்களை இந்தியா மிஸ் செய்யும்”
ஸ்டோக்ஸ் ஏமாற்றம்:
“அவர் தனது சொந்த வழியில் 18வது ஜெர்ஸி நம்பரை உருவாக்கினார். அதை நாம் மற்றொரு இந்திய வீரர் ஜெர்ஸியின் பின்னே பார்க்க முடியாது. நீண்ட காலமாக அவர் கிளாஸ் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி பந்தை கவர்ஸ் திசையில் கடினமாக ட்ரைவ் அடிப்பது எப்போதும் நினைவில் இருக்கும். அந்த கவர் ட்ரைவ் நம் மனதில் நீண்ட காலம் இருக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: என்னோட மனைவி சொன்ன அந்த வார்த்தை.. அதுதான் டெல்லி அணியை பொளக்க காரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி
கடைசியாக 2021இல் விராட் கோலி தலைமையில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடியது. அத்தொடரில் இங்கிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா 4 போட்டிகளில் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அப்போது லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட கடைசிப் போட்டியில் 2022ஆம் ஆண்டு விளையாடி வெற்றி பெற்ற தொடரை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.



