33 ரன்ஸ் 4 விக்கெட்ஸ்.. பஞ்சாப்பை திணறடித்த தமிழக வீரர் சாய் கிசோர்.. ரசித் கானுக்கு நிகராக சாதனை

Sai Kishore
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் 37வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு சாம் கரண் – பிரப்சிம்ரன் சிங் 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதில் பிரப்சிம்ரன் சிங் 35 (21) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ரிலீ ரோசவ் 9 (7) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய கேப்டன் ஷாம் கரன் 20 (19) ரன்கள் ரசித் கான் சுழலில் சிக்கினார். அப்போது வந்த அதிரடி வீரர் ஜிதேஷ் சர்மாவை 13 (12) ரன்களில் தமிழக வீரர் சாய் கிஷோர் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அசத்திய சாய் கிசோர்:
அதோடு நிற்காத அவர் சசாங் சிங்கை 8 (12) ரன்களில் அவுட்டாக்கி அசுடோஸ் சர்மாவையும் 3 (6) ரன்களில் காலி செய்தார். இந்த சீசனில் சசாங் சிங் – அசுடோஸ் சர்மா ஆகியோர் அற்புதமான ஃபார்மில் 2 தூண்களைப் போல் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு போராடி வருவதை அறிவோம். ஆனால் அவர்களை அடுத்தடுத்த ஓவரில் காலி செய்த சாய் கிஷோர் இப்போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதனால் 99/7 என சரிந்த பஞ்சாப் அணி கடைசியில் ஹார்ப்ரீத் ப்ரார் 29 (12) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4, நூர் அஹ்மத் 2, மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இப்போட்டியில் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த சாய் கிசோர் குஜராத் அணிக்காக ரசித் கானுக்கு பின் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் குஜராத் அணிக்காக சிறந்த பவுலிங்கை பதிவு செய்த 3வது ஸ்பின்னர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அந்த பட்டியல்:
1. ரசித் கான் : 4/24, லக்னோவுக்கு எதிராக, 2022
2. ரசித் கான் : 4/30, மும்பைக்கு எதிராக, 2023
3. சாய் கிஷோர் : 4/33, பஞ்சாப்புக்கு எதிராக, 2024*

இதையும் படிங்க: ஒரே ஓவர்தான் எல்லாத்தையும் மாத்திட்டாரு.. எங்களோட வெற்றியையும் அவர் பறிச்சிட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

இதைத் தொடர்ந்து 143 என்ற சுலபமான இலக்கை குஜராத் துரத்தி வருகிறது. குறிப்பாக புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தவிக்கும் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப்பை தோற்கடிக்க வேண்டிய அவசியத்தில் விளையாடி வருகிறது.

Advertisement