ஒரே ஓவர்தான் எல்லாத்தையும் மாத்திட்டாரு.. எங்களோட வெற்றியையும் அவர் பறிச்சிட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பிலிப் சால்ட் 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் குவித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் :

விதிமுறைகள் எப்போதுமே அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் விராட் கோலி மற்றும் எனக்கும் அந்த பந்து மேலே சென்றதாக தான் தெரிந்தது. ஆனாலும் கிரீசின் கணக்கின் அடிப்படையில் விராட் கோலி ஆட்டம் இழந்ததாக அம்பயர்கள் முடிவு செய்தனர். அதன் பின்னர் வில் ஜேக்ஸ் மற்றும் பட்டிதார் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி மீண்டும் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.

- Advertisement -

இருப்பினும் சுனில் நரேன் வீசிய ஒரு ஓவர் எங்களை இந்த போட்டியில் இருந்து பின்னுக்கு தள்ளியது. ஒரே ஓவரில் அவர் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க அந்த ஓவர் தான் எங்களுக்கு பின்னடைவை தந்தது. ஒரே ஓவரில் அவர் மொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்.

இதையும் படிங்க : ஒரு ஓவர் திருப்பு முனையா அமைஞ்சுது.. கடைசியில் டிகே வெச்சு பிளான் போட்டேன்.. ஆட்டநாயகன் ரசல் பேட்டி

சிறிய சிறிய விடயங்களில் தவறுகள் இருந்தாலும் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறேன். இந்த போட்டியில் எங்களுடைய முழு உழைப்பையும் அளித்து நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். இருந்தாலும் இனிவரும் போட்டிகளில் வெற்றிகரமாக இந்த தொடரை முடிப்போம் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement