ஒரு ஓவர் திருப்பு முனையா அமைஞ்சுது.. கடைசியில் டிகே வெச்சு பிளான் போட்டேன்.. ஆட்டநாயகன் ரசல் பேட்டி

Andre Russell
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் போட்டியில் பெங்களூருவை வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 222/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 48, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன், யாஷ் தயாள் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 223 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி 18, கேப்டன் டு பிளேஸிஸ் 7, கேமரூன் கிரீன் 6, தினேஷ் கார்த்திக் 25 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் வில் ஜேக்ஸ் 55, ரஜத் படிடார் 52, கரண் சர்மா 20 (7) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் 221 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

அசத்திய ரசல்:
அதனால் வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள், 27* ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ஆண்ட்ரே ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த படிடார் – ஜேக்ஸ் ஆகியோரை 12வது ஓவரில் தாம் அவுட்டாக்கியது வெற்றிக்கான திருப்பு முனையாக அமைந்ததாக ரசல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. ஏற்கனவே சொன்னது போல் நான் எப்போதும் என்னுடைய பந்து வீச்சுக்கு ஆதரவு கொடுக்கிறேன். முக்கியமான நேரத்தில் என்னால் பந்து வீச்சில் அசத்த என்பது எனக்கு தெரியும். அதிர்ஷ்டமாக அது இன்று நடந்தது. நான் பேட்டிங் செய்யும் போது குறைவான வேகத்தில் வந்த பந்துகளை அடிப்பது கடினமாக இருந்தது”

- Advertisement -

“எனவே பவுலராக நானும் அதை செய்ய விரும்பினேன். அதை பயன்படுத்தி 2 செட்டிலான பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியது மகிழ்ச்சி. அது தான் போட்டியை மாற்றியது என்று நினைக்கிறேன். சுனில் நரேன் எடுத்த 2 முக்கிய விக்கெட்டுகளும் ஆர்சிபி’யின் சரிவுக்கு வழி வகுத்தது. கடைசி நேரத்தில் 2 ஓவர்கள் இருந்த போது நான் 19 ஓவரை வீச நிபந்தனை விதித்துக் கொண்டேன்”

இதையும் படிங்க: 137/2 டூ 155/6.. வெறும் 1 ரன்னில் சொதப்பிய ஆர்சிபி.. தொடர்ந்து 7வது முறை.. பிளே ஆஃப் கனவு உடைந்ததா?

“அதில் சிறப்பாக விளையாடி முடிந்தளவுக்கு கடைசி ஓவரில் ஸ்டார்க்கிற்கு அதிக ரன்கள் கொடுக்க முயற்சிப்பேன். இன்று தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். எனவே 19வது ஓவரில் 6 பந்துகளையும் அவருக்கே வீசி கலக்க முயற்சித்தேன். அதிர்ஷ்டவசமாக அது வேலை செய்தது” என்று கூறினார்.

Advertisement