3 வருடமாக திணறும் மஞ்சள் படை.. தோற்க விரும்பும் 9 அணி ரசிகர்கள்.. 2010 மேஜிக் நிகழ்த்துமா சிஎஸ்கே?

CSK vs PBKS 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 5 வெற்றியும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. கடைசியாக பஞ்சாப்புக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சொந்த மண்ணில் சென்னை பரிதாபமாக தோற்றது. அதையும் சேர்த்து சிஎஸ்கே அணியை தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் தோற்கடித்த அணி என்ற மும்பையின் சாதனையை பஞ்சாப் சமன் செய்தது.

மறுபுறம் கடைசியாக 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை தோற்கடித்திருந்த சென்னை அதன் பின் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த வகையில் கடைசி 3 வருடங்களாக பஞ்சாப் அணியை தோற்கடிக்க முடியாமல் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் திணறி வருகிறது என்றே சொல்லலாம். இதை தொடர்ந்து மீண்டும் பஞ்சாப்பை தங்களுடைய அடுத்த போட்டியில் சென்னை எதிர்கொள்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே வெல்லுமா:
மே ஐந்தாம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் அந்தப் போட்டி இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் நடைபெறுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அந்தப் போட்டியில் எப்படியாவது பஞ்சாப்பை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை களமிறங்க உள்ளது.

ஆனால் அந்த போட்டியில் சென்னை தோற்க வேண்டுமென் பஞ்சாப் உட்பட எஞ்சிய 9 ஐபிஎல் அணி ரசிகர்களும் வேண்டுகிறார்கள். ஏனெனில் புள்ளிப்பட்டியலில் 6, 7, 8, 9, 10 இங்கு இடங்களில் உள்ள டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் சென்னை தோல்வியை சந்திக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல சென்னை தோல்வியை சந்தித்தால் டாப் 4 இடங்களில் உள்ள ராஜஸ்தான் கொல்கத்தா, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் அதனுடைய அடுத்தகட்ட போட்டிகளில் ஓரிரு தோல்விகளை சந்தித்தாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும். அந்த வகையில் 9 எதிரணி ரசிகர்களின் விருப்பத்தை தாண்டி தடைகளை உடைத்து 3 வருடங்கள் கழித்து இப்போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிகே’வுக்கு மரியாதை கொடுத்த விராட் கோலி.. ஆர்சிபிளே பிளே ஆஃப் செல்வதற்கு நிகழ வேண்டியது இதோ

சொல்லப்போனால் 2010ஆம் ஆண்டு இதே தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் இர்பான் பதானுக்கு எதிராக அடுத்தடுத்த சிக்ஸர்கள் அடித்த தோனி வெறித்தனமான ஃபினிஷிங் செய்தார். அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை கடைசியில் தங்களுடைய முதல் கோப்பையையும் வென்றது. அதே போன்ற மேஜிக் வெற்றியை இப்போட்டியில் சிஎஸ்கே பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement