ஆர்சிபி ரசிகர்களுக்காக வருத்தப்படுறேன்.. அதை செஞ்சுருந்த இந்நேரம் 2 கோப்பை ஜெயிச்சுருக்கலாம்.. ராயுடு சோகமான அட்வைஸ்

Ambati Rayudu 55
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்த பெங்களூரு புள்ளிப்பட்டியலில் ஒரு மாதமாக கடைசி இடத்தில் திண்டாடியது. ஆனால் அதற்கடுத்த 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்தது.

அதனால் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அந்த அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று நம்பப்பட்டது. இருப்பினும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக தொடர்ந்து 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் ஆர்சிபி வெளியேறியது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

ராயுடு அட்வைஸ்:
முன்னாதாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வென்றதை கோப்பையை வென்றதற்கு நிகராக விராட் கோலியும் ஆர்சிபி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். அதனால் சிஎஸ்கே அணியை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடினால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது என்று ஆர்சிபி அணிக்கு முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு அறிவுரை வழங்கினார். மேலும் ஆர்சிபி கோப்பையை வெல்வதற்கு இந்திய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ராயுடு கேட்டுக்கொண்டார்

அதே சமயம் தோல்வியை சந்தித்த சென்னை இப்போதும் 5 கோப்பைகளை வென்ற சாம்பியன் என்று அவர் ஆர்சிபி ரசிகர்களை கிண்டலடித்து பதிவிட்டிருந்தார். அவருடைய கருத்துக்கள் ஆர்சிபி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்காக தாம் வருந்துவதாக ராயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் தனிப்பட்ட சாதனைகளை தாண்டி ஒன்றாக சேர்ந்து அணியாக விளையாடியிருந்தால் இந்நேரம் ஆர்சிபி குறைந்தது 2 – 3 கோப்பைகளை வென்றிருக்கும் என்றும் ராயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பல வருடங்களாக அணியை ஆர்வத்துடன் ஆதரித்து வரும் அனைத்து ஆர்சிபி ரசிகர்களை நோக்கி எனது இதயம் உண்மையிலேயே செல்கிறது. நிர்வாகமும் கேப்டன்களும் வீரர்களும் தனிப்பட்ட சாதனைகளை தாண்டி அணியின் நலனை முதன்மையாக கொண்டிருந்தால் இந்நேரம் ஆர்சிபி பல பட்டங்களை வென்றிருக்கும்”

இதையும் படிங்க: 2022 கஷ்ட காலத்துல நண்பனா உட்கார்ந்து பேசுனாரு.. டிகே கொடுத்த தன்னம்பிக்கை பற்றி விராட் கோலி நெகிழ்ச்சி

“இந்த நேரத்தில் அவர்கள் எவ்வளவு அற்புதமான வீரர்களை அணியிலிருந்து போக விட்டார்கள் என்பதையும் நினைத்து பாருங்கள். எனவே முதலில் அணியின் நலனுக்காக விளையாடக்கூடிய வீரர்களை கொண்டுவர ஆர்சிபி ரசிகர்கள் தங்களின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை செய்தால் ஒரு மகத்தான புதிய பாகம் அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் துவங்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement