சி.எஸ்.கே அணிக்காக ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம்.. ஆனால் அவர் என் சொல்பேச்சை கேக்கல – தோனி சாடல்

CSK-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியிருந்தாலும் தோனி குறித்து நாள்தோறும் ஒவ்வொரு சுவாரஸ்யமான தகவல்களாக வெளியாகி வருகின்றன. அதோடு பிரத்தேயேக பேட்டிகளில் கலந்து கொண்டு அவர் அளிக்கும் கருத்துக்களும் இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது தோனி கூறியதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக ஒரு முக்கிய வீரரை தேர்வு செய்ததாகவும் அவர் அணிக்காக விளையாடாமல் தனிப்பட்ட ஆட்டத்தை ஆடுவதில் மட்டுமே தீவிரமாக இருந்ததால் அவருக்காக எவ்வளவோ இறங்கி சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தோனி கூறிய அறிவுரைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அதனால் அவரை அணியிலிட்டு நீக்க முடிவு செய்ததாகவும் தோனி கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது : எங்களது அணியில் நாங்கள் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம்.

ஆனால் அவர் அணியின் சூழலை கருத்தில் கொண்டு விளையாடாமல் தனிப்பட்ட முறையில் விளையாடி வந்தார். அதனால் இரண்டு மூன்று அடி கூட இறங்கிச் சென்று அவரிடம் பேசிப் பார்த்தோம். நீங்கள் அணிக்காக சிறப்பாக செயல்படுங்கள் என்றோம். ஆனால் அதை அவர் கொஞ்சமும் கேட்கவில்லை. எனவே அவரை அணியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு.

- Advertisement -

வியாபாரமா விளையாட்டு எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அணியின் சூழலை புரிந்து கொண்டு விளையாட வில்லை என்றால் அவரை நீக்குவதை தவிர்த்து வேறு வழி கிடையாது. ஒரு நபருக்காக மொத்த அணியும் மாறுவதை நான் விரும்பவில்லை. அது மிகவும் தவறு. மிகச் சிறந்த வீரராக இருந்தாலும் அவரை அணியிலிருந்து நீக்கி தான் ஆக வேண்டும்.

இதையும் படிங்க : என்னால் தான் தினேஷ் கார்த்திக் அந்த முடிவை எடுத்தார்.. எமோஷனலாக பேசிய – தீபிகா பல்லிகல்

அவருடைய இடத்தை வேறு யாராவது வந்து நிரப்புவார்கள் என்று தோனி குறிப்பிட்டுள்ளார். இப்படி தோனி ஒரு முக்கியமான வீரர் என்று குறிப்பிட்டு இருந்தாலும் அந்த வீரர் யார்? என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. தற்போது அந்த வீரர் யார் என்பது குறித்தே அனைவரும் விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement