ஆஸ்திரேலியாவுக்காக மட்டும் அசத்தும் அவர் ஐபிஎல் வரலாற்றின் ஓவர்ரேட்டட் பிளேயர்.. பார்திவ் படேல் விளாசல்

Parthiv Patel
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் அனைத்து 10 அணிகளும் கோப்பையை வெல்வதற்காக கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. வழக்கம் போல இந்த வருடமும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறைய வீரர்கள் தங்களுடைய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் கொல்கத்தா அணியில் ஆரம்பத்தில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தார்.

இருப்பினும் சமீபத்திய போட்டிகளில் நல்ல விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டார். அதனால் ஒரு கட்டத்தில் அணிக்கு பாரமாக இருக்க விரும்பாத அவர் தமக்கு தாமே பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனிலிருந்து விலகினார்.

- Advertisement -

ஓவர்ரேட்டட் பிளேயர்:
அந்த சூழ்நிலையில் நேற்று குஜராத்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி 148 ரன்களை சேசிங் செய்தது. அப்போது கேப்டன் டு பிளேஸிஸ் – விராட் கோலி ஆகியோர் அடித்து நொறுக்கி 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். அதன் பின் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் புத்துணர்ச்சியுடன் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது வெறும் 4 ரன்னில் அவுட்டான அவர் மீண்டும் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். நல்லவேளையாக கடைசியில் கார்த்திக் 21*, ஸ்வப்னில் சிங் 15* ரன்கள் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் 2024 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் வெறும் 36 ரன்களை 5.14 என்ற மோசமான சராசரியில் எடுத்து பெங்களூரு அணியின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் கிளன் மேக்ஸ்வெல் ஐபிஎல் வரலாற்றின் ஓவர்ரேட்டட் பிளேயர் என்று முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் ஓவர்ரேட்டட் பிளேயர்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக சிறந்த வீரர் அல்லது ஐபிஎல் தொடரில் சிறந்த வீரர் என்ற ஆன்லைன் வாக்கெடுப்பை பார்த்தீவ் பட்டேல் நடத்தினார்.

இதையும் படிங்க: விராட் கோலி மேல பழி போடாதீங்க.. 16 வருஷமா அவங்க என்ன பண்ணாங்க? வாசிம் அக்ரம் காட்டமான பதிலடி

அதில் 79% ரசிகர்கள் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக மகத்தான வீரர் என்று வாக்களித்துள்ளனர். அதே போல ஐபிஎல் தொடரில் வெறும் 21% மட்டுமே மேக்ஸ்வெல் சிறந்த வீரர் என்று ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்காக அபாரமாக செயல்படும் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதில்லை என்று பார்த்திவ் படேல் விமர்சிப்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement