137/2 டூ 155/6.. வெறும் 1 ரன்னில் சொதப்பிய ஆர்சிபி.. தொடர்ந்து 7வது முறை.. பிளே ஆஃப் கனவு உடைந்ததா?

KKR vs RCB 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 36வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திணறும் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 48(14) விளாசி அவுட்டானார்.

அவருடன் சேர்ந்து 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே விளையாடிய சுனில் நரேனை 10 (15) ரன்களில் அவுட்டாக்கிய யாஷ் தயாள் அடுத்ததாக வந்த அங்ரீஸ் ரகுவன்சியை 3 ரன்களில் பெரிய அனுப்பினார். அதற்கடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சித்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து 50 (36) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

சொதப்பிய ஆர்சிபி:
இறுதியில் ரிங்கு சிங் 24 (16) ரன்களில் ஆட்டமிழந்தாலும் ரசல் 27* (20), ரமந்தீப் சிங் 24* (9) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் கொல்கத்தா 222/6 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 223 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு அதிரடியாக 18 (7) ரன்கள் எடுத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி சென்றார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய கேப்டன் டு ப்ளசிஸ் 7 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 35/2 என மாறிய பெங்களூரு அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் படிடார் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் 4வது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடி 12 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

ஆனால் அப்போது வில் ஜேக்ஸை 55 (32) ரன்களில் அவுட்டாக்கிய ரசல் அதே ஓவரில் ரஜத் படிடாரை 52 (23) ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார். அப்போது வந்த கேமரூன் கிரீன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்து வந்த பிரபுதேசாய் 24, மஹிபால் லோம்ரர் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

கடைசியில் தினேஷ் கார்த்திக் 25 (18) ரன்களில் அவுட்டானதால் பெங்களூருவின் தோல்வி 99% உறுதியானது. ஆனாலும் மிட்சேல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 6, 0, 6 என 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட கரன் சர்மா 5வது பந்தில் 20 (7) ரன்களில் அவுட்டானார். அதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது லாக்கி பெர்குசன் 1 (1) ரன்னில் ரன் அவுட்டானதால் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

குறிப்பாக 137/2 என்ற வலுவான நிலையில் இருந்த பெங்களூரு 155/6 என சரிந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் கொல்கத்தாவுக்கு எதிராக கடைசி 7 போட்டிகளில் பெங்களூரு 7வது தோல்வியை சந்தித்தது. அத்துடன் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2014 சீசனில் சார்ஜாவில் கொல்கத்தாவிடம் 2 ரன் வித்யாசத்தில் அந்த அணி தோற்றிருந்தது.

இதையும் படிங்க: இது நோ-பால் இல்லையா.. யாரை ஏமாத்துறிங்க.. விராட் கோலிக்கு எதிரான தீர்ப்பால் ஆர்சிபி ரசிகர்கள் கொதிப்பு

மேலும் 8 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை விட்டு மீள முடியவில்லை. அதே காரணத்தால் அந்த அணியின் பிளே ஆஃப் கனவும் 50% நொறுங்கியுள்ளது. மறுபுறம் திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement