இது நோ-பால் இல்லையா.. யாரை ஏமாத்துறிங்க.. விராட் கோலிக்கு எதிரான தீர்ப்பால் ஆர்சிபி ரசிகர்கள் கொதிப்பு

- Advertisement -

2024 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 36வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 222/6 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 48, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2, யாஷ் தயால் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 223 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஒரு பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 18 (7) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார்.

- Advertisement -

சர்ச்சை தீர்ப்பு:
ஆனால் ஹர்ஷித் ராணா வீசிய 3வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அவர் பவுலரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இருப்பினும் ஹர்ஷித் ராணா அந்தப் பந்தை மிகவும் மெதுவான லோ ஃபுல் டாஸாக வீசினார். மறுபுறம் அதை சற்றும் எதிர்பாராத விராட் கோலி இடுப்புக்கு மேலே வருவது போல் தெரிந்ததால் நோபால் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்தார்.

இருப்பினும் களத்தில் இருந்த நடுவர்கள் நோபால் வழங்காமல் அவுட் கொடுத்ததால் ஏமாற்றமடைந்த விராட் கோலி ரிவியூ செய்தார். அதை 3வது நடுவர் சோதித்த பந்து விராட் கோலியின் இடுப்புக்கு மேலே வந்தது தெரிந்தது. ஆனாலும் அந்த சமயத்தில் வெள்ளைக்கோட்டை விட்டு விராட் கோலி வெளியே வந்திருந்தார். அத்துடன் விராட் கோலியின் இடுப்பு உயரம் 1.04 மீட்டர் உயரம் என்ற நிலையில் பந்து 0.92 மீட்டர் உயரத்தில் வந்ததாக ரிப்ளையில் தெரிய வந்தது.

- Advertisement -

எனவே இந்த 2 விதிமுறைகளை வைத்து 3வது நடுவர் மைக்கேல் கௌவ் நோ-பால் வழங்காமல் விராட் கோலி அவுட் என்று அறிவித்தார். அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்து கொண்டு அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் டெக்னாலஜியை தாண்டி சாதாரண கண்களால் பார்க்கும் போது விராட் கோலியின் இடுப்புக்கு மேலே பந்து வருவது நன்றாக தெரிவதாக பெங்களூரு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வர இவருக்கே அதிக வாய்ப்பு – சுரேஷ் ரெய்னா கணிப்பு

எனவே வழக்கம் போல இந்த போட்டியில் மீண்டும் தங்களுக்கு எதிராக நடுவர்கள் மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளதாக ஆர்சிபி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் சற்று முன் வரை பெங்களூரு 10 ஓவரின் 122/2 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

Advertisement